பெருமையுடன் டாப்லெஸ் புகைப்படம் வெளியிட்ட நடிகரின் மனைவி: குவியும் பாராட்டுக்கள்
மும்பை:
உலக புற்றுநோய் தினமான இன்று நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தாஹிரா கஷ்யப்புக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சை பெறுவதால் தாஹிரா மொட்டை அடித்துள்ளார். அவர் புற்றுநோய் வந்துவிட்டதே என்று அழுது புலம்பாமல் தைரியமாக எதிர்கொள்வதுடன் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக உள்ளார்.
இந்நிலையில் உலக புற்றுநோய் தினமான இன்று தாஹிரா செய்த செயலை பார்த்து பலரும் அவரை பாராட்டியுள்ளனர். தாஹிரா டாப்லெஸ்ஸாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் இது பெரிய விஷயம் இல்லை தான். ஆனால் தாஹிரா தனது தழும்புகளை கூட பெருமையாக ஏற்பதை தெரிவிக்கவே இப்படி புகைப்படம் வெளியிட்டாரே தவிர தனது உடல் அழகை காட்டுவதற்காக அல்ல.
தாஹிராவின் நிதானமும், தைரியமும் தான் அனைவரையும் அவரை பாராட்டவும், பார்த்து வியக்கவும் வைக்கிறது.


Click it and Unblock the Notifications











