ஹோட்டலுக்கு ரூ. 3.4 லட்சம் ஹேண்ட்பேக் எடுத்துச் சென்ற பிரபல ஹீரோவின் மனைவி
மும்பை: உணவகத்திற்கு சாப்பிட சென்ற நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தாஹிரா வைத்திருந்த ஹேண்ட்பேக்கின் விலையை அறிந்து வியக்காதவர்களே இல்லை.
பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தனது மனைவி தாஹிரா கஷ்யப்புடன் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சாப்பிட சென்றார். சிவப்பு நிற உடை அணிந்திருந்த தாஹிரா அதற்கு ஏற்றது போன்று சிவப்பு நிற ஹேண்ட்பேக் வைத்திருந்தார்.

அவர் வைத்திருந்த எல்.வி. கேபுசின்ஸ் ஹேண்ட்பேக்கின் விலை ரூ. 3.4 லட்சம் ஆகும். அடேங்கப்பா, டின்னர் சாப்பிட போக ரூ. 3.4 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக்கா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள். பாலிவுட்டில் இதெல்லாம் சகஜமப்பா!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தாஹிரா அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்த பிறகு அதை அவர் தைரியமாக எதிர்கொண்ட விதம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு டாப்லெஸ் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார் தாஹிரா. இப்படி ஒரு தைரியமான பெண்ணை பார்த்தது இல்லை என்று கூறி பெருமைப்பட்டார் ஆயுஷ்மான் குரானா.


Click it and Unblock the Notifications











