பரபரப்பாக விற்பனையாகும் நடிகை கரீனா மகனின் பொம்மை: என்ன கொடுமை சார் இது?
மும்பை: கேரளாவில் பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மகன் தைமூர் போன்றே இருக்கும் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.
பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சயிப் அலி கானின் மகன் தைமூர் அலி கான் பிறந்த நாளில் இருந்தே சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளார். அவர் எங்கு சென்றாலும் அவரை புகைப்படம் எடுக்க புகைப்படக் கலைஞர்கள் ஆர்வமாக செல்கின்றனர்.
சில புகைப்படக் கலைஞர்களின் பெயர் கூட அந்த குட்டிப் பையனுக்கு தெரிந்துள்ளது. கேமராக்களை பார்த்தால் பயப்படாமல் சிரித்தபடி போஸ் கொடுக்கும் தைமூரை பலருக்கும் பிடித்துள்ளது.
பொம்மை
தைமூர் போன்று பொம்மை செய்து அவர் பெயரிலேயே கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதை பார்த்த தயாரிப்பாளர் அஸ்வினி இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

மகன்
தைமூர் போன்று பொம்மைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து அவரின் தந்தை சயிப் அலி கானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, என் மகன் மூலம் மக்கள் நன்மை அடைந்தால் மகிழ்ச்சி தான். ஆனால் என் மகன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
நிஜமா?
என்னாது தைமூர் போன்று பொம்மை விற்பனைக்கு வந்துள்ளதா என்று பலரும் வியக்கிறார்கள்.
கிண்டல்
முதலில் பொம்மை அடுத்து என்ன சிலையா என்று கிண்டல் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











