ஒரு தாஜ்மஹால் இன்னொரு தாஜ்மஹாலை பாக்குதே... அடடே காஜலை புகழும் நெட்டிசன்ஸ்
சென்னை: ஷாஜஹானின் காதல் மனைவி மும்தாஜிற்காக கட்டிய நினைவுச் சின்னமான தாஜ்மகாலைப் பார்த்ததும் அது என்னை கடந்த காலத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றது. இந்த நினைவை என் மனதில் மறக்கவே முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுத்துள்ளது, என்று நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உலக காதலர்களின் ஒரே காதல் சின்னமான தாஜ்மஹாலை தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும், இளஞ்சோடிகளும் வந்து பார்த்து ரசித்து தங்கள் மனதில் உள்ள ஆசைகளையும் எண்ணங்களையும் பரிமாறிக்கொள்வதுண்டு.

கடந்த 1990ஆம் ஆண்டுகளில் அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் தன் காதல் மனைவி மற்றும் மகளுடன் இந்தியா வந்தபோது, தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காகவே ஸ்பெஷலாக ஒரு நாளை ஒதுக்கி, தாஜ்மஹாலை திகட்ட திகட்ட பார்த்து அதிசயித்து சொன்ன வார்த்தைகள், உலக மக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒரு வகையினர் தாஜ்மஹாலை பார்த்து ரசித்தவர்கள். மற்றொரு பிரிவினர் தாஜ்மஹாலை பார்க்காதவர்கள், என்பது தான். தாஜ்மஹாலை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஓர் இனம் புரியாத அழகு வெளிப்படும். இவ்வளவு புகழ்பெற்ற தாஜ்மஹாலை இந்திய மக்களில் இன்னமும் கூட பெரும்பாலானவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதில் முக்கியமான விஐபி நடிகை காஜல் அகர்வால்.
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் நடித்த கோமாளி திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது தமிழில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ரனரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தாஜ்மகாலை பார்த்துள்ளார்.
உலகின் அதிசயங்களில் ஒன்றான மற்றும் காதலின் சின்னமான தாஜ்மகாலை முதன் முதலாக நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். அந்த அனுபவத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மூலம் பகிர்ந்துள்ளார்.
தாஜ்மகாலின் மகத்துவத்தை பார்த்தவுடன் நான் மெய் மறந்து, மயக்கமடைந்து பிரமித்து நின்றேன். அதன் வசீகரிக்கும் அழகைப் பற்றி நான் இதுவரையில், நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அதன் கட்டிடக் கலைகளையும், உட்புறங்களில் உள்ள விவரங்களையும் பார்த்தும் மெய்மறந்து நின்றேன்.
ஷாஜஹானின் காதல் மனைவி மும்தாஜின் சமாதியான தாஜ்மகால் பார்த்ததும் அது என்னை கடந்த காலத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றது. இந்த நினைவை என் மனதில் மறக்கவே முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுத்துள்ளது, என்று நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், ஒரு தாஜ்மஹாலே இன்னொரு தாஜ்மஹால பார்க்க போயிருக்கிறதே அடடே ஆச்சரியக்குறி, என்று புகழ்ந்திருக்கிறார்கள்.
ஷாஜஹான் மும்தாஜுக்காக உருவாக்கியது நினைவுச்சின்னம் என்றாலும் வரலாற்றில் காதல் சின்னமாக வளம் வருகிறது. அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமே காதலின் நினைவுச்சின்னமாக விளங்குவது இந்த தாஜ்மகால் மட்டுமே.


Click it and Unblock the Notifications











