கரண் ஜோஹரிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை புடுங்குங்க.. சுஷாந்த் மரண விவகாரம்.. கங்கனா பாய்ச்சல்
மும்பை: பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹரிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை இந்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை கங்கனா ரனாவத் வைத்துள்ளார்.
Recommended Video
சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த நாளில் இருந்தே, அவரது மரணத்தை விசாரிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார் கங்கனா ரனாவத்.
சல்மான் கான், கரண் ஜோஹர், மகேஷ் பட் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களால் வளர்க்கப்படும் நெப்போடிசம் தான் சுஷாந்த் மரணத்திற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

சிபிஐ விசாரணை
மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி வரும் நடிகை கங்கனா ரனாவத், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விசாரணையை சிபிஐ எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கங்கனா பாராட்டு
இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மற்றும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் 4வது உயரிய குடிமகன் விருதான அந்த விருதுக்கு கரண் ஜோஹர் மிகவும் தகுதியானவர் என நடிகை கங்கனா ரனாவத் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

திரும்ப பெற வேண்டும்
இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பிறகு, கரண் ஜோஹருக்கு அந்த விருதை வைத்திருப்பதற்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவர் என்றும், இந்திய ராணுவத்திற்கு எதிராக கஞ்சன் சக்ஸேனா படத்தை இயக்கியுள்ளார். சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு காரணமானவர், அவரிடம் இருந்து அந்த பத்மஸ்ரீ விருதை திரும்பி பெற வேண்டும் என இந்திய அரசுக்கு கங்கனா கோரிக்கை வைத்துள்ளார்.

மோதல்
மேலும், தன்னை சினிமா துறையை விட்டு விலக சொன்னவர் கரண் ஜோஹர் என்ற குற்றச்சாட்டையும் அவர் மீது திணித்துள்ளார் கங்கனா ரனாவத். பாலிவுட் மாஃபியாவாக செயல்படுவதாக கங்கனா ரனாவத் மட்டுமின்றி பல பாலிவுட் ரசிகர்களும் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கங்கனாவின் இந்த கமெண்ட்டுக்கு கரண் ஜோஹர் என்ன பதில் அளிக்க உள்ளார் என்பதை காண திரையுலகம் காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











