இந்த 7 நடிகர்களின் சம்பளத்தை கேட்டாலே கண்ணை கெட்டுதே
மும்பை: பாலிவுட் பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரியுமா?
பாலிவுட் பிரபலங்களில் பலர் கோடிகளில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். அதிலும் தற்போது என் படம் ரூ.100 கோடி வசூலிக்கின்றதா உன் படம் வசூலிக்கின்றதா என்று போட்டி போட்டு நடிக்கிறார்கள்.
இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் சிலரின் சம்பளம் எவ்வளவு என்று பார்ப்போம்.

ஷாருக்கான்
ஷாருக்கான் தான் நடித்த ஜப் தக் ஹை ஜான் படத்திற்கு ரூ.35 கோடி சம்பளம் வாங்கினாராம்.
இந்த படத்தை அடுத்து அவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கான்
பாக்ஸ் ஆபிஸில் கில்லியாய் இருக்கும் 'தபாங்' நாயகன் சல்மான் கான் ரூ.60 கோடி சம்பளத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

ஆமீர் கான்
பெர்ஃபெக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படும் ஆமீர் கான் தூம் 3 படத்தில் நடிக்க ரூ.45 கோடி வாங்கியுள்ளாராம்.

அக்ஷய் குமார்
கடின உழைப்புக்கு பெயர் போன அக்ஷய் குமார் ஒரு படத்திற்கு ரூ.45 கோடியை சம்பளமாக வாங்குகிறார்.

கரீனா கபூர்
பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருக்கும் கரீனா கபூர் கான் ரூ.15 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

சைஃப் அலி கான்
பாலிவுட் நடிகரும், கரீனாவின் கணவருமான சைஃப் அலி கான் ஒரு படத்திற்கு ரூ.15 கோடி பெறுகிறார்.

ரன்பீர் கபூர்
பர்ஃபி படம் ஹிட்டானதையடுத்து ரன்பீர் கபூர் ரூ.15 கோடி சம்பளம் வாங்குகிறார்.


Click it and Unblock the Notifications











