கத்துக்கணும்யா, ராகவா லாரன்ஸை பார்த்து கத்துக்கணும்: சொல்வது ஸ்ரீரெட்டி
Recommended Video

சென்னை: ராகவா லாரன்ஸை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
டோலிவுட்காரர்கள் ஒதுக்கி வைத்த பிறகு சென்னையில் செட்டில் ஆன ஸ்ரீ ரெட்டி ராகவா லாரன்ஸின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து ராகவா லாரன்ஸுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
நிவாரணம்
புயலால் சாலையோரம் வசிப்பவர்கள், தெருவோரம் கடை வைத்திருப்பவர்களின் நிலையை நினைத்து வருத்தப்பட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. லாரன்ஸ் மாஸ்டர் கேரளா வெள்ளத்தின் போது நிறைய உதவி செய்தார். அவரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு அனைவரும் முன் வந்து உதவ வேண்டும். சூர்யா சார் குடும்பத்திற்கு நன்றி. என்னால் முடிவதை செய்வேன் என்று ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் தெரிவித்த ஸ்ரீ ரெட்டி தற்போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று நெட்டிசன்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர்.
தனுஷ்
தனுஷ் பேசிய வசனம் ஒன்றை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. அடுத்து தனுஷ் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் போன்று. ஸ்ரீ ரெட்டிக்கு தனுஷ் வாய்ப்பு கொடுப்பாரா?

உதாரணம்
பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களின் நிலை மோசமாகி விடுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் ஸ்ரீ ரெட்டி தான். டோலிவுட்டில் பாலியல் புகார் தெரிவித்ததால் ஒதுக்கப்பட்டு மாநிலம் விட்டு மாநிலம் வந்து பிழைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











