எப்படி சார் இப்படி...கமலிடம் யாரும் கேட்காத ரகசியத்தை கேட்ட பிரேமம் டைரக்டர்
திருவனந்தபுரம் : சில ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படம் தெலுங்கு, தமிழ் என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு, அந்த படங்களும் செம ஹிட்டாகின.
பிரேமம் படம் ரிலீசாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படம் பற்றிய பல ரகசியங்களை அடுத்தடுத்து வெளியிட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார் அல்போன்ஸ். பிரேமம் படத்தின் க்ளைமாக்ஸ் பற்றிய ரசிகர்கள் பல ஆண்டுகளாக கேட்ட கேள்விகளுக்கு இப்போது தான் வாய் திறந்துள்ளார்.

பல துறைகளில் திறமை
அல்போன்ஸ் டைரக்டராக மட்டுமல்ல, பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். நடிப்பு, எடிட்டிங் என பல திறமைகளை கொண்டுள்ளார். மலையாளத்தில் வினீத் ஸ்ரீநிவாசன் இயக்கிய தட்டத்தின் மறையது படத்தின் டிரைலர் உள்ளிட்ட பல படங்களின் டிரைலர்களை எடிட் செய்ததும் அல்போன்ஸ் தான்.

கமலஹாசனை புகழ்ந்த அல்போன்ஸ்
சமீப நாட்களாக மீடியாக்களில் செய்திகளில் அதிகம் அடிபடும் பெயராக இருக்கும் அல்போன்ஸ், தற்போது கமலஹாசனை புகழ்ந்து மீண்டும் மீடியாக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். ட்விட்டரில் கமலிடம் சில ரகசிய டிப்ஸ்களை அவர் கேட்டுள்ளார்.

தசாவதாரத்தின் 13 ம் ஆண்டு
கமல் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படம் ரிலீசாகி 13 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனைக் கொண்டாடும் விதமாக இன்ஸ்டாகிராமில் தான் தோன்றிய 10 கேரக்டர்களை பற்றி தனித்தனியாகவும், மொத்தமாகவும் ஃபோட்டோ வெளியிட்டு, விளக்கம் அளித்துள்ளார். இதனை பார்த்து விட்டு தான் அல்போன்ஸும் கமலிடம் டிப்ஸ் கேட்டுள்ளார்.

எப்படி சார் இப்படி
அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கமலஹாசன் சார், மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் ஷாட்களை எப்படி எடுத்தீர்கள் என சொல்ல முடியுமா? படம் இயக்குவதில் தசாவதாரம் பிஎச்டி போன்றது. மைக்கேல் மதன காம ராஜன் டிகிரி கோர்ஸ் போன்றது என குறிப்பிட்டுள்ளார்.

பிஸியான கமல்
கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தான் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து பாபநாசம் 2, இந்தியன் 2 போன்ற படங்களிலும் கமல் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











