சித்தார்த்தின் டக்கர்.. மரகத மாலை பாடலின் லிரிக் வீடியோ ரிலீஸ்!
சென்னை : டக்கர் படத்தின் மரகத மாலை பாடல் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் டக்கர், இந்த படத்தை கார்த்திக் ஜி கிரீஸ் இயக்கி இருக்கிறார். படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் நிவாஷ் கே பிரசன்னா. இந்த படத்தில் இருந்து முதல் பாடலான ரெயின்போ திறளில் எனும் பாடல் கடந்த மாதம் வெளியாகி ட்ரெண்டானது. இதனையடுத்து தற்போது மரகத மாலை என்ற பாடல் வெளியாகி உள்ளது.

முதல் பாடலான ரெயின்போ பாடல் நடிகர் சிம்புவால் பாடப்பட்ட பாடலாகும். இந்த பாடலின் வெளியீடு சென்னையில் உள்ள ஒரு மாலில் நடைப்பெற்றது. பாடல் வெளியீட்டிற்காக நடந்த விழாவில் பாடலை பாடிய சிம்பு வரவில்லை. இதனால் மக்களுக்காக நடிகர் சித்தார்த்தே அந்த பாடலை பாடி நடனமாடி மக்களை உற்சாகப்படுத்தினார்.
அதன் பிறகு தற்போது படத்தின் இரண்டாவது பாடல் இணையத்தில் வெளியிடபட்டிருக்கிறது. இந்த பாடலை பிரதீப் விஜய், விஜய் யேசுதாஸ், சின்மயி ஶ்ரீபாட ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார் நிவாஷ் கே.பிரசன்னா. பாடலுக்கு அருமையான வரிகளை தந்திருக்கிறார் பாடலாசிரியர் உமாதேவி .

பெண் பாடலாசிரியர் உமா தேவி சமீபத்தில் அதிக படியான பாடல்களுக்கு வரிகள் எழுதி வருகிறார். சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற படமான குண்டு படத்தில் நிலமெல்லாம் பாடலை எழுதியிருந்தார். மிகவும் தாக்கம் மிகுந்த பாடலாக அந்த பாடல் அமைந்திருந்தது. டக்கர் படத்தை தயாரித்து உள்ள ஃபேஸன் ஸ்டூடியோஸ், படத்தில் சித்தார்த், யோகிபாபு, திவ்யான்ஷா, அபிமன்யூ சிங், விக்னேஷ்காந்த் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர் .

கப்பல் படத்தை இயக்கிய இயக்குனரான கார்த்திக் ஜி கிரீஸ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார், இவர் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனர் ஆவார். இந்த படத்தின் முன்னோட்டம் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











