ஒத்த ஆள்.. பத்து மூளை.. நம்ம பார்த்திபன் சாருக்கு இன்னைக்கு பர்த்டே!

Recommended Video

Parthiban Oththa Seruppu: பார்த்திபன் பரிதாபங்கள் மக்களிடம் கையேந்தும் பார்த்திபன்

சென்னை: ஒரு விஷயத்தை வித்தியாசமா செஞ்சாத்தான் அவங்கள கலைஞன்னு சொல்ல முடியும், அப்போ பார்த்திபன் சார் நிச்சயம் கலைஞன் தான்.

சினிமாவுல பல பேரு ஒரு பாதையில போவாங்க, ஒரு சில பேரு தனி பாதையில போவாங்க, நம்ம பார்த்திபன் சார் தனக்கான புதிய பாதை ஒண்ண போட்டு அதுல நடந்து போகும் திறமைசாலி.

பார்த்திபன் சார் மாதிரி எழுத ட்ரை பண்ணா கொஞ்சம் மொக்கையாத் தான் இருக்கும். ஏன்னா நாம பார்த்திபன் சார் இல்லையே அவர போல நல்லா எழுதுறதுக்கு. தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச நல்ல கலைஞன் பார்த்திபன் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

எல்லாம் யாரால?

எல்லாம் யாரால?

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞனாக பார்த்திபன் மாற காரணம் யாரென்று பார்த்தால், அவரது குருநாதர் பாக்யராஜ் சாராகத் தான் இருக்க முடியும். நல்ல பள்ளியில் படித்தால், நல்ல மாணவனாக வரலாம். ஆனால், அதே பள்ளியில் எல்லாரும் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குறது இல்லையே. அந்த மாணவனுக்குள்ள திறமை இருந்தா மட்டும் தான் நல்ல பள்ளியில படிச்சாலும் ஜெயிக்க முடியும். பார்த்திபனின் வளர்ச்சிக்கு பார்த்திபன் மட்டுமே காரணம்.

நம்புங்க சார்

நம்புங்க சார்

நானும் ரவுடிதான் படத்துல டவுசர் போட்டுட்டு நடிச்ச பார்த்திபன், சமீபத்தில் வெளியான ஒத்த செருப்பு படத்துல, ஒரே ஆளா, படத்தை இயக்கி, தயாரித்து, நடித்து, அதிலும் அந்த வேகமாக நடித்து காட்டும் காட்சியில் அந்த அளவுக்கு வெறித்தனமான நடிப்பை துடிப்பாக வெளிப்படுத்திய பார்த்திபன் சாருக்கு இன்று 62வது பிறந்த நாள். என்னது 62 வயசாகிடுச்சா, நம்புங்க சார், 1957ம் ஆண்டு பிறந்தவர் இன்னைக்கு அவருக்கு 62 வயசாகுது. ஆனா, பார்த்தா அப்படி தெரியலையேன்னு சொன்னா அதுதான் பார்த்திபன்.

ஒத்த செருப்பு

ஒத்த செருப்பு

மாஸ், மசாலா, கமர்ஷியல் இல்லாம ஒரே ஆள் நடிச்சு அதுலையும் கிளைமேக்ஸ் வரை ரசிகர்களை சீட்லயே கட்டிப் போடும் மேஜிக், அவ்வளவு வசனங்கள், அத்தனையும் எழுதின அந்த கை, அத்தனையும் பேசிய அந்த வாயுன்னு தமிழ் சினிமாவுக்கு ஒரு தரமான படமாக ஒத்த செருப்பு படத்தை இயக்கிட்டு தியேட்டருக்கு போய் பார்த்தா கூட்டமே இல்லை. ஆனாலும், அந்த ஒத்த செருப்ப வச்சிக்கிட்டு ஆஸ்கர், கோல்டன் குளோப் என தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடி தந்து கொண்டிருக்கிறார் பார்த்திபன்.

புதுமை பித்தன்

மிக மிக அவசரம் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமெடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் பார்த்திபனுக்கு, "தமிழ் சினிமாவின் புதுமை பித்தன் பார்த்திபன் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பரமபதம்

மூடர்கூடம், அலாவுதினும் அற்புத கேமராவும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நவீன் தனது பாணியில் நடிகர் பார்த்திபனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். "வாழ்க்கை எனும் பரமபதத்தில் நிறைய பாம்புகளை சந்தித்த நீங்கள், நிறைய ஏணிகளையும் உருவாக்கியுள்ளீர்கள்" என வாழ்த்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X