மறுபடியும் கஜினியாகப் போகும் சூர்யா

சென்னை: சூர்யா நடிக்க கஜினி 2-ம் பாகம் தயாராகும் என படஅதிபர் சந்திரசேகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

சூர்யா, அசின், நயன்தாரா இணைந்து நடித்து 2005-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'கஜினி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். சேலம் ஏ.சந்திரசேகரன் தயாரித்தார்.

எனவே இதன் இரண்டாம் பாகத்தை 'கஜினி பார்ட்-2' என்ற பெயரில் எடுக்க தயாரிப்பாளர் சேலம் ஏ.சந்திரசேகரன் முயற்சி மேற்கொண்டு உள்ளார். இந்த படத்தில் சூர்யா நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹிந்தியில் கஜினி...

ஹிந்தியில் கஜினி...

அமீர்கான், அசின் ஜேடியாக இந்தியிலும் கஜினி ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் படம் வசூலில் சக்கை போடு போட்டது. .

கை கொடுக்கும் கை இல்லையா...?

கை கொடுக்கும் கை இல்லையா...?

இதுகுறித்து தயாரிப்பாளர் கேயார் கூறும்போது, சினிமா உலகில் மனித நேயம் குறைந்து வருகிறது. கஷ்டப்படுகிற தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்க ஆள் இல்லை. சூர்யா ‘கஜினி-2' படத்தில் நடித்து சேலம் சந்திரசேகருக்கு கைகொடுக்க வேண்டும் என்றார்.

கஜினி-2 ...

கஜினி-2 ...

சேலம் சந்திரசேகரனிடம் இதுகுறித்து கூறும்பொழுது, ‘கில்லாடி' படம் ரிலீசானதும் ‘கஜினி-2' பட வேலைகள் துவங்கப்படும். இதற்காக ‘கஜினி-2' படபெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன்.

சூர்யா தான் சூப்பர்...

சூர்யா தான் சூப்பர்...

கஜினி படத்தில் சூர்யா பிரமாதமாக நடித்து இருந்தார். அமீர்கானைவிட சூர்யாதான் கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருந்தார். எனவே அவர்தான் ‘கஜினி-2' படத்தில் நடிக்க வேண்டும். அவரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசுவேன்' , என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X