பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் ரெடி...இளைஞர்களை கவர கவர்ச்சியும் ரெடி

சென்னை : ரியாலிட்டி ஷோவான தமிழ் பிக்பாஸ் ஏற்கனவே 4 சீசன்களை பூர்த்தி செய்துள்ளது. மிகப் பெரிய வெற்றி அடைந்த இந்த நிகழ்ச்சி, ஏராளமான ரசிகர்களை உலகம் முழுவதும் பெற்றுள்ளது.

கடந்த 4 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். முதல் 3 சீசன்களும் ஜூன் மாதம் துவங்கப்பட்டு, செப்டம்பரில் இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. ஆனால் 4 வது சீசன் கொரோனாவால் தாமதமாக அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு, ஜனவரி 17 அன்று இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.

பிக்பாஸ் 5 எப்போது

பிக்பாஸ் 5 எப்போது

பிக்பாஸ் 5 வது சீசனை ஜூன் மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. 100 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் வீட்டில் தங்க உள்ள பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன.

விஜய் டிவி பிரபலங்களுக்கு வாய்ப்பு

விஜய் டிவி பிரபலங்களுக்கு வாய்ப்பு

விஜய் டிவி பிரபலங்கள் பலரை பங்கேற்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் அதிக பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் தர்ஷா குப்தா, பவித்ர லட்சுமி, சிவாங்கி, அஸ்வின் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. பிக்பாஸ் 4 ல் வைல் கார்ட் சுற்றில் நுழைய இருந்து, கடைசி நேரத்தில் முடியாமல் போன நடிகர் அஜீம் இந்த முறை பங்கேற்க உள்ளார்.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை

சினிமாவில் கவர்ச்சி புயலாய் வலம் வரும் பல நடிகைகளை பிக்பாஸ் 5 ல் பங்கேற்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. ராய் லட்சுமி, பூணம் பஜ்வா, ஸ்ரீரெட்டி, கிரண் ஆகியோரையும், மூத்த போட்டியாளர்களாக லட்சுமி ராமகிருஷ்ணன், ராதா ரவி ஆகியோரையும் பங்கேற்க வைக்க முயற்சி நடக்கிறது.

 வேறு யாருக்கு வாய்ப்பு

வேறு யாருக்கு வாய்ப்பு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் ஹேமா, சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களான ராதா, சித்தார்த் ஆகியோரும் பங்கேற்க வாய்ப்புள்ளது. இவர்கள் தவிர மேலும் சில சினிமா பிரபலங்களை பங்கேற்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டால் இந்த சீசனில் கவர்ச்சி, சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.

கமல் பங்கேற்பாரா

கமல் பங்கேற்பாரா

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை பொறுத்தே இந்த சீசனில் கமல் பங்கேற்பாரா என்பது முடிவு செய்யப்படும். கமல் பங்கேற்காவிட்டால் அவருக்கு பதில் யாரை பங்கேற்க செய்வது என்பது பற்றிய ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. இறுதி வேட்பாளர் பட்டியலில் பல மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X