ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸ்... சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படம் சாதனை
சென்னை : நேற்றைய தினம் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டாக்கு லெஸ் வொர்க்கு மோரு லிரிக்ஸ் பாடல் வெளியிடப்பட்டது.
Recommended Video
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தரன்குமார் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது.
வெளியான 24 மணிநேரத்திற்குள் 1.2 மில்லியன் பார்வைகளை தற்போது இந்த பாடல் கடந்துள்ளது.

சாந்தனு ஹீரோ
நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் லீட் ரோல்களில் நடிக்க காமெடி மற்றும் ரொமாண்டிக் படமாக உருவாகியுள்ளது முருங்கைக்காய் சிப்ஸ். இந்த படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மனோபாலா உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2வது பாடல் வெளியீடு
இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் இசையை தரன்குமார் அமைத்துள்ளார். இந்த மாத துவக்கத்தில் வெளியான படத்தின் மெலடி வீடியோ பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நேற்று மாலை படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது.
1.2 மில்லியன் பார்வைகள்
லிரிக் பாடலாக வெளியான இந்த பாடலை ஷிவாங்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாம் விஷால் பாடியுள்ளனர். இந்நிலையில் வெளியிடப்பட்ட 24 மணிநேரத்தில் இந்த பாடல் 1.2 மில்லியன் வியூக்களை தற்போது கடந்துள்ளது. குத்துப்பாடல் வகையில் வெளிவந்துள்ள இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விஷூவல் ட்ரீட்
இயக்குநர் ஸ்ரீஜர் டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்த படம் மாஸ்டர் படத்திற்கு பிறகு சாந்தனுவிற்கு மற்றுமொரு சிறப்பை சேர்க்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்தின் முதல் பாடல் இந்த மாத துவக்கத்தில் வெளியான நிலையில், அந்த பாடல் நல்ல விஷூவல் ட்ரீட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications