பட்டையை கிளப்பிய டாக்கு லெஸ் வொர்க்கு மோர் பாடல்... வீடியோ நாளை வெளியீடு

சென்னை : நடிகர் சாந்தனு, அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ்.

படத்தின் இரண்டாவது சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு லிரிக் வீடியோவாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது பாடலின் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முருங்கைக்காய் சிப்ஸ் படம்

முருங்கைக்காய் சிப்ஸ் படம்

நடிகர் சாந்தனு, அதுல்யா ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் முருங்கைக்காய் சிப்ஸ் இந்த படத்தின் முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. அது மெலடி ரகம். அதற்கு அடுத்ததாக டாக்கு லெஸ் வொர்க்கு மோர் என்ற பாடல் வெளியிடப்பட்டது.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு


குத்து வகை பாடலான இந்த பாடல் லிரிக் வீடியோவாக மட்டுமே வெளியானது. ஷாம் விஷால் மற்றும் ஷிவாங்கி பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதன் வியூக்களும் லட்சக்கணக்கில் சென்றுள்ளது. ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.

வீடியோ பாடல் நாளை வெளியீடு

வீடியோ பாடல் நாளை வெளியீடு

மாஸ்டர் படத்திற்கு பிறகு சாந்தனுவிற்கு இந்த படம் சிறப்பான வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அவரது தந்தை பாக்யராஜூம் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது டாக்கு லெஸ் வொர்க்கு மோரு பாடலின் வீடியோ பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 5 மணிக்கு வெளியீடு

ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தருண்குமார் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இந்த பாடல் சிறப்பாக வந்துள்ளது. இந்நிலையில் பாடலின் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X