»   »  12 வருஷமாகியும் இன்னும் கோலம் போடும் தமன்னா

12 வருஷமாகியும் இன்னும் கோலம் போடும் தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமன்னா நடிக்க வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது.

16 வயதில் நடிகையானவர் தமன்னா. 2005ம் ஆண்டு வெளியான சாந்த் சா ரோஷன் செஹரா என்ற இந்தி படம் மூலம் அவர் ஹீரோயின் ஆனார். கேடி படம் மூலம் கோலிவுட் வந்தார்.

கல்லூரி படம் அவரை பலருக்கும் அடையாளம் காட்டியது.

டோலிவுட்

டோலிவுட்

கோலிவுட் தவிர டோலிவுட்டிலும் அவர் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழில் கார்த்திக்கு பொருத்தமான ஜோடி என்று பேசப்பட்டவர் தமன்னா.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட்டில் அறிமுகமானாலும் அவரை வளர்த்துவிட்டது கோலிவுட்டும், டோலிவுட்டும் தான். பல காலம் கழித்து மீண்டும் பாலிவுட் சென்ற அவரை பார்த்து நடிகர் ரித்திக் ரோஷன் பார்பி பொம்மை என்று கூற பிற நடிகைகளுக்கு காதில் புகை வந்தது.

பாகுபலி

பாகுபலி

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி உலக அளவில் ரூ. 1, 500 கோடி வசூல் செய்துள்ள பாகுபலி 2 படத்தில் அவந்திகாவாக நடித்திருந்தார் தமன்னா. இந்த படத்தில் நடித்ததை பாக்கியமாக கருதுகிறார் அவர்.

12 ஆண்டுகள்

12 ஆண்டுகள்

தமன்னா நடிக்க வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். நயன்தாரா, த்ரிஷாவை அடுத்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஹீரோயினாக நடித்து வரும் நடிகையாகியுள்ளார் தமன்னா.

தமன்னா

தமன்னா

சீனியராகியுள்ள நிலையில் நயன்தாரா, த்ரிஷா போன்று ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Milk beauty Tamanna has completed 12 years in the film industry. She is still one of the busiest actresses in the industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil