மஹா சிவராத்திரி விழாவில் டான்ஸ் ஆடிய தமன்னா... ஜக்கி பற்றி ட்விட்டரில் கருத்து!

By Vignesh Selvaraj

Recommended Video

Actress tamannaah dance in coimbatore Isha center during Mahasivaratri

கோவை : நடிகை தமன்னா தற்போது உதயநிதியுடன் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து வருகிறார். இதன் படிப்பிடிப்புகள் சமீபத்தில் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது.

இந்நிலையில் நேற்று கோவை ஈஷா யோகா சார்பில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா கலந்துகொண்டார். மேலும் சில நடிகைகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்களாம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமன்னா, டான்ஸ் ஆடியிருக்கிறார். அவரது ட்விட்டர் பக்கத்திலும் இதுபற்றி பகிர்ந்திருக்கிறார் தமன்னா.

தமன்னா

தமன்னா

தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார் நடிகை தமன்னா. இவருடைய நடிப்பில் வெளியான 'பாகுபலி' படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனையடுத்து மிகவும் பிரபலமடைந்த நடிகை தமன்னா பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடு

இந்நிலையில் நேற்று மஹா சிவராத்திரி என்பதால், அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக, கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஈஷா யோகா மையத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தமன்னாவும் கலந்துகொண்டார்

தமன்னாவும் கலந்துகொண்டார்

இதில் நடிகை தமன்னாவும் கலந்துகொண்டு சத்குருவுடன் இணைந்து வழிபாட்டில் ஈடுபட்டார். அப்போது டான்ஸ் ஆடியிருக்கிறார் தமன்னா. இதுகுறித்து நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். "இந்த சிவராத்திரியை என்னால் மறக்க முடியாது. நேற்றைய தினம் ஒரு மேஜிக்கல் அனுபவம் போல் இருந்தது.

ட்விட்டரில் பகிர்ந்த தமன்னா

இங்குள்ள ஊழியர்கள் அனைவரும் சிறப்பாக வழிநடத்திச் சென்றனர். அவர்கள் யாரும் வாய் திறந்து பேசுவதும் கிடையாது. மொத்தத்தில் அமைதியே உருவான இடமாக இருந்தது, அங்கிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வழிபட்டேன். இதற்காக சத்குருவுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் போதாது" எனக் கூறியுள்ளார் தமன்னா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X