»   »  எனக்கும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்: காஜலை அடுத்து தமன்னா அடம்

எனக்கும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்: காஜலை அடுத்து தமன்னா அடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
இனிமேல் ஹீரோவுடன் மரத்தை சுற்ற மாட்டேன் - தமன்னா

சென்னை: எனக்கும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்று தமன்னா அடம்பிடிக்கிறாராம்.

கடந்த ஆண்டை போன்று இல்லாமல் இந்த ஆண்டு தமன்னாவுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. விக்ரமுடன் சேர்ந்து நடித்த ஸ்கெட்ச் படம் ரிலீஸானது. க்வீன் படத்தின் தெலுங்கு ரீமேக், மராத்தி, இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார் தமன்னா.

தமன்னா

தமன்னா

தமன்னா என்றதுமே கிளாமர் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருகிறது. ஹீரோவுடன் மரத்தை சுற்றி சுற்றி வந்து டான்ஸ் ஆடும் கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்துள்ளார் தமன்னா.

ஹீரோயின்

ஹீரோயின்

போனது போகட்டும் இனி நான் நடிப்புக்கு(அதாவது ஹீரோயினுக்கு) முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிப்பேன். இத்தனை ஆண்டுகள் கிடைத்த அனுபவத்தை நடிப்பில் காட்டுவேன் என்கிறார் தமன்னா.

முடிவு

முடிவு

நான் இனி மேல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ள நிலையில் தமன்னாவும் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார்.

அனுஷ்கா

அனுஷ்கா

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார்கள் அனுஷ்காவும், நயன்தாராவும். இந்நிலையில் காஜலும், தமன்னாவும் அந்த பட்டியலில் சேர முடிவு செய்துள்ளனர்.

English summary
Tamanna has decided to chose movies that give her scope to express her acting talent fully. She wants to concentrate on heroine oriented movies just like Nayanthara and Anushka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil