நான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்
Recommended Video

சென்னை: கண்ணே கலைமானே படம் குறித்த சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது.
அப்பொழுது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,

தமன்னா
அடுத்த படத்திற்கும் கூப்பிடுமாறு தமன்னா தெரிவித்தார். அது என் கையில் இல்லை. என் படத்தில் அவர் நடிக்கிறாரோ இல்லையோ ஆண்டுக்கு ஒரு முறை சீனு ராமசாமி சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று தமன்னாவை கேட்டுக் கொள்கிறேன்.

கதை
சீனு சார் என்னிடம் கதையை சொல்லிவிட்டு தமன்னா தான் ஹீரோயின் என்றார். சரி அவரிடம் போய் பேசுங்கள் என்றேன். தமன்னாவிடம் போய் இது ஹீரோயினை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் என்று தெரிவித்துள்ளார் சீனு சார். ஆனால் அதை அவர் என்னிடம் சொல்லவில்லை.

நீங்கள் தானா?
தமன்னா கதையை கேட்ட பிறகு எனக்கு போன் செய்தார். நான் இந்த படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறேன் என்று அவர் நம்பவே இல்லை. உண்மையாகவே நீங்க தான் ஹீரோவா என்று தமன்னா என்னிடம் கேட்டார். நான் தாங்க ஹீரோ என்றேன்.

முக்கியத்துவம்
கதை நன்றாக இருக்கிறது, ஆனால் எனக்கும் உங்களுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் உள்ளதே என்றார் தமன்னா. தமன்னாவை இந்த படத்தில் மேக்கப் போடவிடவில்லை. படப்பிடிப்பின்போது பல நேரம் நான் தமன்னாவிடம் ஆங்கிலத்தில் பேச அவர் தமிழில் பேசுவார். அவர் நன்றாக தமிழ் பேசுவார். இந்த படம் ரிலீஸான பிறகு பாரதி கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.


Click it and Unblock the Notifications











