அதாச்சு 12 வருஷம்: அசால்டா சொல்லும் தமன்னா
சென்னை: தான் தற்போது ரொம்பவே தெளிவாகிவிட்டதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
தமன்னாவின் மார்க்கெட் நிலவரம் சுமாராகத் தான் உள்ளது. சயீரா நரசிம்ம ரெட்டி வரலாற்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு தெலுங்கு, ஒரு இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் சினிமா பற்றி தமன்னா கூறியதாவது,

நடிப்பு
நான் சினிமா துறைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகியுயள்ளது. முதலில் இந்த துறை பற்றி எதுவும் புரியவில்லை. தற்போது இந்த துறை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளேன். நான் ரொம்ப தெளிவாக உள்ளேன்.

தெளிவு
நடிக்க வந்த புதிதில் என்னை தேடி வந்த பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்றேன். அதனால் சில படங்கள் எனக்கு எதிராக அமைந்துவிட்டன. அதன் பிறகே ஒரு தெளிவு ஏற்பட்டு எனக்கு ஏற்ற படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறேன். நான் எத்தனையோ படங்களில் நடித்துள்ள போதிலும் பாகுபலி படம் வெளியான பிறகே மக்கள் என்னை நல்ல நடிகையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பாகுபலி
நான் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளேன். ஆனால் நேரடி இந்தி படங்களில் நடித்தபோது கிடைக்காத அங்கீகாரம் பாகுபலி இந்தி டப்பிங் மூலம் கிடைத்தது. ஒரு படத்தை தேர்வு செய்து நடிக்கும்போதே இந்த படம் ஹிட்டாகுமா, தோல்வி அடையுமா, நமக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்குமா என்று எல்லாம் கூறிவிட முடியாது. அனைத்து படங்களையும் முக்கியமான படமாக நினைத்தே நடிக்கிறோம்.

தோல்வி
இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நினைத்தால் அது தோல்வி அடைந்துவிடும். சில படங்கள் மீது அவ்வளவாக நம்பிக்கை ஏற்படாது. ஆனால் அந்த படங்கள் சூப்பர் ஹிட்டாகிவிடும். அதனால் படங்களின் வெற்றி, தோல்வியை கணிக்க முடியாது. அது ரசிகர்களின் கையில் உள்ளது. சினிமா துறையில் எதையும் கணிக்க முடியாது. நல்ல படங்கள் எப்பொழுது கிடைக்கும், எப்படி கிடைக்கும் என்று தெரியாது. நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நல்ல பட வாய்ப்பு கிடைக்கும். திடீர் என்று நம் உயரத்தை அடைந்துவிடுவோம் என்கிறார் தமன்னா.


Click it and Unblock the Notifications











