»   »  அஜீத்துடன் முதல் முறை ஜோடி சேரும் தமன்னா!

அஜீத்துடன் முதல் முறை ஜோடி சேரும் தமன்னா!

Subscribe to Oneindia Tamil

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அஜீத்தின் அடுத்த படத்தில் அவருக்கு இவர் ஜோடி, அவர் ஜோடி என்று கூறி வந்தனர். இப்போது அந்த ஊசலாட்டத்துக்கு முற்றுப் புள்ளி விழுந்துள்ளது.

அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாரதி ரெட்டி தயாரிக்க, வெங்கட்ராம ரெட்டி வழங்கும் பெயிரிடப்படாத புதிய படம் விரைவில் தொடங்கவிருக்கிறது.

தன்னை அஜீத்தின் தீவிர ரசிகன் என்று கூறும் இயக்குனர் சிவா, "படத்துக்கு கதாநாயகி தேடல் முடிவடைந்துவிட்டது. விதார்த், பாலா, முனீஷ், சோஹில், என்று இளம் நாயகர்கள் சிலர் அஜீத்தோடு இணைந்து நடிக்கின்றனர். தமன்னா முதல் முறையாக அஜீத்துடன் ஜோடி சேருகிறார்.

ஜெயராம், சந்தானமும் இப்படத்தின் நகைச்சுவைக்கு உத்தரவாதம், ஜெயப்பிரகாஷ், இளவரசு என்று குணசித்திர நடிகர்களும் உண்டு," என்றார்.

மறைந்த நாகி ரெட்டியின் நூற்றாண்டு நிறைவு நாளான டிசம்பர் 2 ஆம் தேதி இந்தப் படத்தின் பாடல் பதிவு நடக்கிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Tamanna is the lead lady in Ajith's untitled new movie produced by Vijaya Productions.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more