விஷாலுடன் முதல் முறை ஜோடி சேரும் தமன்னா!
நடிகர் சங்க வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு மிகத் தீவிரமாக செய்து கொண்டிருந்தாலும், பட வேலைகளில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார் விஷால்.
இப்போதைக்கு சொந்தப் படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருக்கும் அவர், வெளிப் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படமான கத்தி சண்டை படத்தின் தொடக்க வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்தப் படத்தில் முதல் முறையாக விஷாலுடன் இணைகிறார் தமன்னா.
வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சம்பத் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். காமெடி, கமர்ஷியல் ஸ்பெஷலிஸ்ட் சுராஜ் இயக்கும் கத்தி சண்டை படத்தின் படிப்பிடிப்பு மே மாதம் 2 ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்குகிறது.
Comments


Click it and Unblock the Notifications