twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமன்னாவின் கண்ணாடி கவர்ச்சி ஆடை... கதிகலங்கிய பிரபலங்கள்

    By Mayura Akilan
    |

    ஹைதராபாத்: விருது விழாவில் பங்கேற்கும் நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சி ஆடைகளில் வந்து கலங்கடிப்பார்கள். ஆனால் விருது விழா பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கே தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகள் கவர்ச்சி ஆடைகளில் வந்து கதிகலங்க வைக்கின்றனர்.

    பாகுபலி படத்தின் ஒரு பாடல் காட்சியில் தேவதையாக தோன்றி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார் தமன்னா. படம் வெளியாகி சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதே தேவதை நினைப்பிலேயே இருக்கிறார் தமன்னா என்பதை அவரது நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன.

    சமீபத்தில் ஹைதராபாத்தில் ஹைதராபாத்தில் நடந்த 'ஐஃபா உத்சவ்' நிகழ்ச்சியில் உடலின் முக்கால்வாசி பாகங்கள் தெரியக்கூடிய வகையில் கண்ணாடி ஆடை உடுத்தி வந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளை பரவசப்படுத்தினார்.

    ஐஃபா உற்சவம்

    ஐஃபா உற்சவம்

    சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐஃபா), தென்னிந்திய படங்களை கொண்டாடும் விதமாக, ஹைதராபாத்தில் 'ஐஃபா உற்சவம்' என்ற மாபெரும் திரைப்பட விருது விழாவை நடத்துகிறது. பாலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த ஐஃபா விருதுகள் இனி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

    விருது விழா கொண்டாட்டம்

    விருது விழா கொண்டாட்டம்

    சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐஃபா), இந்திப் படங்களுக்கான விருது விழாவை கடந்த 15 வருடங்களாக நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இந்திப் படங்களுக்கான விருது விழாவை நடத்தி உள்ளது. இன்னும் நடத்த இருக்கிறது.

    டிசம்பரில் விருது விழா

    டிசம்பரில் விருது விழா

    இப்போது, முதன் முறையாக, தென்னிந்திய திரைப்படங்களைக் கொண்டாடும் விதமாக, ஐஃபா உற்சவம் என்ற பெயரில் சினிமா விழாவை நடத்துகிறது. டிசம்பர் மாதம் 4, 5, 6-ம் தேதிகளில் ஹைதராபாத்தில் நடக்கும் இந்த விழாவில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    பிரபலங்கள் பங்கேற்பு

    பிரபலங்கள் பங்கேற்பு

    கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், சிரஞ்சீவி, வெங்கடேஷ், த்ரிஷா, மகேஷ்பாபு, நாகார் ஜுனா, மோகன்லால், மாதவன், புனித் ராஜ்குமார், சிவராஜ் குமார் உட்பட பல முன்னணி சினிமா பிரபலங்களும் பங்கேற்கின்றனர். விழாவின் முதல் நாள், பிக்கி-ஐஃபா இணைந்து நடத்தும் வர்த்தகக் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதலீட்டு வாய்ப்புகள், கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சினிமா டூரிசம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படும்.

    ரசிகர்களின் தேர்வு

    ரசிகர்களின் தேர்வு

    இரண்டாவது நாள் விழாவில், தமிழ், மலையாள சினிமா நட்சத்திரங்களுக்கு பாராட்டும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளும் நடக்கும். மூன்றாவது நாள் கன்னடம் மற்றும் மலையாளத் திரைத்துறையினருக்கான விழா நடக்கும். விழாவில் ஒவ்வொரு சினிமா துறைக்கும் 22 விருதுகள் வழங்கப்படும். தகுதியானவர்களை முதலில் திரைத்துறையினர் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். பின்னர் இணையதளம் மூலம் ரசிகர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் முடிவுகள் விழா மேடையில் அறிவிக்கப்படும்.

    ஹைதராபாத்தில் தமன்னா

    ஹைதராபாத்தில் தமன்னா

    இந்த உற்சவத்துக்கான அறிமுக விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது விழாவில் கமல்ஹாசன், நாகர்ஜூனா, உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டனர். அங்கு வந்த தமன்னாதான் சென்டர் ஆஃப் த அட்ராக்சன். கண்ணாடி போன்ற உடையணிந்து வந்து காண்பவர்களை கலங்கடித்தார். விடுவார்களாக போட்டோகிராபர்கள் தமன்னாவின் ஒவ்வொரு அசைவையும் விதம் விதமாக சுட்டுத்தள்ளிவிட்டனர்.

    சென்னையில் அறிமுக விழா

    சென்னையில் அறிமுக விழா

    இதேபோல சென்னையில் அறிமுக விழா சில தினங்களுக்கு முன்னர் சமீபத்தில் நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், இந்திய திரைப்பட வர்த்தக சபையின் துணைத் தலைவர் ரவி கொட்டாரக்கரா, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை செயலாளர் காட்ரகட்ட பிரசாத், நடிகர் மாதவன், சின்னி ஜெயந்த், மோகன், அபிதாஸ், இயக்குனர்கள் பி.வாசு, பாலாஜி மோகன், நடிகைகள் ரோகிணி, ஹன்சிகா, பூஜா குமார், நமீதா, சிம்ரன், அடானி நிறுவன சிஓஓ அங்குஷ் மாலிக், ஐஃபா இயக்குனர் ஆண்ட்ரே திம்மின்ஸ், வின்ஸ்கிராப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் விராத் சர்க்காரி, சன் நெட்வொர்க்கின் அனுஜா ஐயர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    சமூக அக்கறை

    சமூக அக்கறை

    நாசர் பேசும்போது, ‘சினிமாவின் கிளாமர் என்பதை தாண்டி, சமூக அக்கறையையும் கொண்டு இயங்குகிறது ஐஃபா. தென்னிந்தியாவுக்கு வந்திருக்கும் இந்த ஐஃபாவை, நடிகர் சங்கம் சார்பாக வரவேற்கிறேன்' என்றார்.

    உற்சாக மாதவன்

    உற்சாக மாதவன்

    மாதவன் பேசும்போது, ‘இங்கே ஐஃபா விழா பற்றிய கிளிப்பிங்சை திரையிட்டார்கள். அந்த உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது. பணத்துக்காகத்தான் எல்லாரும் வேலை பார்க்கிறோம் என்றாலும் அதற்கான அங்கீகாரம் முக்கியம். அப்படியொரு அங்கீகாரத்தை ஐஃபா வழங்குகிறது' என்றார்.

    கவர்ச்சிப் போட்டியில் ஹன்சிகா

    கவர்ச்சிப் போட்டியில் ஹன்சிகா

    சினிமாவில்தான் கவர்ச்சி காட்ட போட்டி என்றால் விருது விழா அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையர்கள் ஹன்சிகா - தமன்னா இடையே, சினிமாவுக்கு வெளியேயும் கவர்ச்சி போட்டி அதிகரித்துள்ளது. சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹன்சிகாவும், கலக்கல் கவர்ச்சி உடையில் பங்கேற்றார். தமன்னாவின் கண்ணாடி ஆடையோடு ஒப்பிடும்போது ஹன்சிகாவின் ஆடை அலங்காரம் கொஞ்சம் டல்தான் என்கின்றனர் அருகில் இருந்து பார்த்தவர்கள்.

    English summary
    Tamanna’s look at IIFA Utsavam shocked the audience. Tamanna Bhatia was seen as an angel in a song of “Baahubali – The Beginning.” Though this was in the reel life of this film, Tamannaah hasn’t yet come out of that role of angel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X