தமன்னா நடிக்கும் ”பப்ளி பவுன்சர்”...உலகத்தின் பார்வையில் பெண் பவுன்சர்கள் குறித்த கதை

சென்னை: மதுர் பண்டர்க்காரின் அடுத்த திரைப்படமான "பப்ளி பவுன்சர்"( "BABLI BOUNCER") இல் தமன்னா பாட்டியா முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்

நவீன காலத்துக்கு மிகத் தனித்துவம் வாய்ந்த கதையின் தயாரிப்பை தொடங்க ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்ச்சர்ஸ் கைகோர்த்திருக்கின்றன.

காலத்தினால் அழிக்க முடியாத பசுமையான நினைவுச் சின்னமாக உருவெடுத்து உள்ள, உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்களை திரையில் தோன்றச்செய்யும் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்க்கார் .

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ

பெண்களை முதன்மைப்படுத்தும் தனிச்சிறப்பு வாய்ந்த கதைகளை வழங்குவதில் மிகஉயரிய படைப்பாளியாக அறியப்படுகிறார். தீர்க்க தரிசியாக விளங்கும் இந்த திரைப்படத் தயாரிப்பாளர் தமன்னா பாட்டியாவை முன்னெப்போதும் கண்டிராத வகையில் பப்ளி பவுன்சர் அவதாரத்தில் முன்னணி கதாபாத்திரமாக தோன்றச்செய்து ஒரு தனித்துவமான கதைக்களத்தை நம் முன்னே காட்சிப்படுத்துகிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ மீண்டும் ஒருமுறை இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட ஒரு பெண் பவுன்சரின் மகிழ்ச்சியூட்டும் கற்பனைக் கதையாகும்

மனதை விட்டு அகலாத

மனதை விட்டு அகலாத

ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, இதுவரை சொல்லப்படாத ஒரு கதையை ஆராயும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்போது, அது குறித்து உற்சாகம் அடையவும் எதிர்பார்ப்பில் ஆவலோடு திளைப்பதற்கும் ஏராளமாக இருக்கிறது. ஒரு பெண் பவுன்சரின் கதையை வாழ்க்கையோடு இணைந்த நகைச்சுவை உணர்வோடு சித்தரிக்க விரும்புகிறேன், அதுவும் மனதை விட்டு அகலாத ஒரு நீடித்த தாக்கத்தை விளைவிக்கிறது " என்று திரைப்பட தயாரிப்பாளர் மதுர் பண்டர்க்கார் கூறினார்.அவர் தொடர்ந்து கூறுகையில் "பாப்லி பவுன்சரின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், பெண் பவுன்சர்கள் குறித்த உலகத்தின் பார்வையில் இந்தக் கதையை முன்வைக்க எப்போதும் போலவே நான் தயாராக இருக்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த அற்புதமான கதை, தமன்னா தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்!" என்றார்

தமன்னா சொல்லமுடியாத அளவுக்கு

தமன்னா சொல்லமுடியாத அளவுக்கு

படப்பிடிப்பு தொடங்கப்போவது குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகை தமன்னா பாட்டியா, "பப்ளி பவுன்சர் கதையைப் படித்தவுடனே, அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் காதல் வசப்பட்டுவிட்டேன். ஏனென்றால் நான் இதுவரை கண்ட அனைத்தைக் காட்டிலும் இது ஒரு மிகவும் உற்சாகமான மற்றும் ஜாலியான கதாபாத்திரமாகும். பெண்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் வரையறுப்பதிலும் மதுர் சார் மிகச்சிறந்த திறமைசாலி . பப்ளியும் அம்மாதிரியான ஒரு வலிமை வாய்ந்த கதாபாத்திரம். ஒரு திரைப்படம் ஒரு பெண் பவுன்சரின் கதையை முதல் முதலாக பிரதிபலிக்க போகிறது , அந்த கதாபாத்திரத்தின் குரலாக நான் ஒலிக்கப்போகிறேன் என்பதை அறிந்து நான் சொல்லமுடியாத அளவுக்கு உற்சாகத்தில் இருக்கிறேன். இந்த புதிய உலகத்தில் பிரவேசிப்பதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை" என்று தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் தமன்னா .

முன் பின் அறியாத

முன் பின் அறியாத

ஜங்லி பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி அம்ரிதா பாண்டே கூறியது ... இதயத்தைத் வருடும் கதையை அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார் ஆகியோர் வித்யாசமாக உருவாக்கியுள்ளனர் என்று நான் நம்புகிறேன். இந்தத் திரைப்படத்திற்காக ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், மதுர் பண்டர்கார் மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோருடன் இணைந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறோம்.

பப்ளி பவுன்சர் திரைப்படம் பவுன்சர்களின் முன் பின் அறியாத உலகத்தை ஆராய்கிறது. மேலும் இதில் சவுரப் சுக்லா அத்துடன் அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X