»   »  பக்தர்களுடன் வரிசையில் நின்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த தமன்னா

பக்தர்களுடன் வரிசையில் நின்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil
நகை கடை திறப்பு விழாவிற்கு வந்த தமன்னா மீது ஷூ வீசிய மாணவர்

மதுரை: நடிகை தமன்னா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இது விபத்தா இல்லை யாருடைய சதியா என்று சந்தேகம் கிளம்பியுள்ளது.

Tamanna visits Madurai Meenakshi Amman temple

கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ஏதாவது கெட்டது நடந்துவிடுமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று காலை வந்தார்.

பக்தர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். தமன்னாவை கோவிலில் பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த ஆண்டு தமன்னாவுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது.

இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Tamanna visited Madurai Meenakshi Amman temple on monday. She stood in queue with other devotees in the temple which impressed her fans. Tamanna is busy this year with projects in three different languages.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil