Tamannaah: லஸ்ட் ஸ்டோரி வைபில் தமன்னா... கிறங்கடிக்கும் ஜெயிலர் காவாலா சாங் போஸ்டர்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று (ஜூலை 6) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

காவாலா என்ற டைட்டிலில் அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.

இப்பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இன்ட்ரோ சாங்-காக அல்லாமல் தமன்னாவின் பாடலாக வெளியாகிறது.

 Tamannaah: Actress Tamannaah slays in glamour in Jailer first single poster

இந்நிலையில், காவாலா பாடலின் போஸ்டரில் தமன்னாவின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களை கிறங்கடிக்கும் தமன்னா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து கடந்த 1ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள 'காவாலா' என்ற இந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். வழக்கமாக சூப்பர் ஸ்டாரின் படங்களில் அவருக்கான இன்ட்ரோ சாங் தான் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகும்.

ஆனால், தற்போது ஜெயிலர் படத்தில் தமன்னா ஆட்டம் போட்டுள்ள 'காவாலா' என்ற பாடலை ஃபர்ஸ்ட் சிங்கிளாக களமிறக்குகிறார் நெல்சன். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கே இது புரியாத புதிரான அப்டேட்டாக பார்க்கப்படுகிறது. செம்ம பெப்பியான குரலில் 'வா நூ ஆவாலா' எனத் தொடங்கும் இப்பாடல், தமன்னாவின் ரசிகர்களுக்கு கிளாமர் ட்ரீட்டாக இருக்கும் எனத் தெரிகிறது.

 Tamannaah: Actress Tamannaah slays in glamour in Jailer first single poster

தமன்னா நடிப்பில் சமீபத்தில் ஜி கர்தா வெப் சீரிஸ், லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டிலுமே டாப் லெஸ், லிப் லாக் கிஸ்ஸிங் என கிளாமரில் ரசிகர்களை சூடேற்றியிருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களை கிறங்க வைத்திருந்தது. இந்நிலையில் ஜெயிலர் ஃப்ர்ஸ்ட் சிங்கிளிலும் தமன்னா கிளாமரில் மிரட்டியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு உண்மைதான் என படக்குழுவும் உறுதிசெய்துள்ளது. அதாவது தமான்னாவின் படு கவரிச்சியான போஸ்டருடன் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'வா நூ காவாலா' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. முக்கியமாக இந்த போஸ்டரில் தமன்னாவின் கிளாமரை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X