'அவ்வளவு பாதுகாப்பா இருந்தும் இந்த கொரோனா வந்திடுச்சே..' டிஸ்சார்ஜ் ஆன நடிகை தமன்னா விளக்கம்!
சென்னை: பாதுகாப்பாக இருந்தும் கொரோனா தன்னை பாதித்துவிட்டதாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.
பிரபல நடிகை தமன்னாவின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து நடிகை தமன்னா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

கொரோனா அறிகுறி
'என் பெற்றோருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. பரிசோதனை செய்தோம். என் பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என்று கூறி இருந்தார். தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை என்றும் கூறியிருந்தார்.

வெப் சீரிஸ் ஷூட்டிங்
இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக நடிகை தமன்னா ஐதராபாத் வந்தார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

பாதுகாப்பாக இருந்தும்
இதுபற்றி நடிகை தமன்னா எதுவும் கூறாமல் இருந்தார். இப்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும் எனது டீமும் பாதுகாப்பாக இருந்தும் எதிர்பாராத விதமாக எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்தேன்.

நன்றாக உணர்கிறேன்
அதில் எனக்கு பாசிட்டிவ் என வந்தது. இதனால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தேன். மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்தேன். இப்போது குணமானதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன். இந்த வாரம் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன்.

முழுமையாக மீள்வேன்
உலகம் முழுவதும் பலரை கடுமையாகத் துன்புறுத்தும் இந்த தொற்றில் இருந்து நான் முழுமையாக மீண்டு விடுவேன் என்று நம்புகிறேன். இவ்வாறு தமன்னா கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். கவலையே படாதீங்க தமன்னா, நாங்க இருக்கோம் உங்களுக்கு என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

ரெஸ்ட் எடுங்க
கடவுள் எப்போதும் உங்களுடன் இருக்கார் தமன்னா. நல்லா ரெஸ்ட் எடுங்க என்று சிலரும் உங்களிடம் இருந்து இந்த வார்த்தைகளை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது, உடலை பார்த்துக் கொள்ளுங்கள், விரைவில் முழுமையாக குணமடைவீர்கள் என்று சிலரும் பாசமாக கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











