காஜலை தொடர்ந்து தமன்னா.. தெலுங்கு சினிமா அமைப்புக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி.. தமிழ் சினிமாவுக்கு?
சென்னை: தெலுங்கு சினிமா அமைப்புக்கு நடிகை தமன்னா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
Recommended Video
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவலை அளிக்கிறது
அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

சினிமா தொழிலாளர்கள்
சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் தினசரி ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு நிதி திரட்டியது. தெலுங்கிலும் சினிமா தொழிலாளர்களுக்காக புதிய அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

நயன்தாரா
கேரளாவிலும் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி திரட்டி வருகின்றனர். இதற்கு நடிகர்கள் உதவி வந்த நிலையில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோயின்கள் உதவவில்லை என்று புகார் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து நயன்தாரா, காஜல் அகரவால் உள்ளிட்ட சில நடிகைகள் உதவி செய்தனர்.

காஜல் அகர்வால்
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு சினிமா அமைப்புக்கும் பிரதமர் நிவாரண நிதிக்கும் மகாராஷ்ட்ரா மாநிலத்துக்கும் நிதி உதவி அளித்தார். இந்நிலையில் நடிகை தமன்னாவும் உதவி செய்துள்ளார். அவர் தெலுங்கு சினிமா அமைப்புக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

தமிழ் சினிமா
நடிகை தமன்னா தமிழ், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் தெலுங்கு சினிமா அமைப்புக்கு மட்டும் ரூ.3 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது தமிழ் சினிமா அமைப்பினர் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது. தமன்னா இப்போது போலே சுடியான் என்ற இந்தி படத்திலும் சீட்டிமார் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











