தமன்னாவ பார்க்குறதா.. ராஷி கன்னாவ பார்க்குறதா.. ஒரே சோபாவில் இருவரும்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: அரண்மனை 4 டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சுந்தர். சி இயக்கி ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார். இதில், தமன்னா, ராஷி கன்னா என இரு ஹீரோயின்கள் கவர்ச்சி பொங்க நடித்துள்ளனர். மேலும், யோகி பாபு, கோவை சரளா, கேஜிஎஃப் வில்லன் ராமசந்திரா ராஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அரண்மனை 4 டிரெய்லரை பார்த்தால் படம் நல்ல பொருட்செலவில் தரமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், படத்தின் கதையை மொத்தமே அந்த 'பாக்' பேய் உள்பட அனைத்தையும் டிரெய்லரிலேயே சொல்லிவிட்ட நிலையில், படத்தை ரசிகர்கள் விருப்பத்துடன் பார்க்கும் போது எந்தவொரு சர்ப்ரைஸும் இருக்காது என்றே தெரிகிறது.

Tamannaah and Raashi Khanna mesmerizing fans and celebs at Aranmanai 4 trailer launch event

அரண்மனை படங்கள் இதுவரை 3 பாகங்கள் வெளியாகி உள்ளன. முதல் 2 பாகங்கள் சுமாராக ஓடிய நிலையில், 3வது பாகம் படுதோல்வியை சந்தித்தது. ஆனாலும், எனக்கு வேறு வழி தெரியல ஆத்தா என 4ம் பாகத்தையும் சுந்தர். சி இயக்கி நடித்துள்ளார்.

இந்த ஆண்டு இத்தனை பேய் படங்களா?: இதுவரை இந்த ஆண்டு மலையாளத்தில் மம்மூட்டி நடித்த பிரமயுகம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை பயமுறுத்தி 80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி வெற்றிப் பெற்றது. பாலிவுட்டில் மாதவன், ஜோதிகா மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ஷைத்தான் திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து ஹிட் அடித்தது. அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் இன்ஸ்பெக்டர் ரிஷி வெப்சீரிஸ் கூட ஹாரரில் மிரட்டுகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் அரண்மனை 4 படம் வெளியாக காத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரண்மனை 4 டிரெய்லர் எப்படி இருக்கு?: அரைத்த மாவையே அரைப்பது சுந்தர். சிக்கு ஒன்றும் புதிததல்ல. அதே வேலையை தான் அரண்மனை 4லும் செய்திருக்கிறார். தேவி, தேவி 2, பெட்ரமாக்ஸ் உள்ளிட்ட பேய் படங்களில் ஏற்கனவே நடித்த தமன்னாவை வைத்து மீண்டும் ஒரு பேய் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், முகத்தில் அதே எக்ஸ்பிரஷன்கள் தான் இடம்பெற்றுள்ளன. கிளைமேக்ஸில் குஷ்பு பிரம்மாண்ட சாமி சிலைக்கு முன்பு நடனமாடி அம்மனின் அருளால் இந்த முறையும் பேயை ஓட்டப் போகிறார் சுந்தர். சி என்பது டிரெய்லரிலேயே தெரிந்து விடுகிறது.

யாரை பார்க்குறதுன்னே தெரியல: அரண்மனை 4 படத்தின் டிரெய்லரில் இருவரையும் கிளாமராக சுந்தர். சி காட்டியதை விட தமன்னாவும் ராஷி கன்னாவும் கவர்ச்சி உடையில் நேற்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வந்த காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன. இருவரும் ஒரே சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு ரசிகர்களை வசீகரித்துள்ளனர். சம்மர் ஸ்பெஷலாக வெளியாக உள்ள இந்த படம் கல்லா கட்டுமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X