அரண்மனை 4ல் சுந்தர் சி-க்கு ஜோடி இவங்களா..? இரண்டு ஹீரோயின்களுடன் க்ளாமர் ட்ரீட் தான் போல!
சென்னை: காஃபி வித் காதல் படத்தை தொடர்ந்து அரண்மனை 4 இயக்கும் வேலைகளில் பிஸியாகிவிட்டார் சுந்தர் சி.
இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதியும், காமெடி கேரக்டரில் சந்தானமும் நடிப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால், சம்பளம், கால்ஷீட் போன்ற பிரச்சினைகளால் அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி தான் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஹீரோயின்கள் குறித்தும் தற்போது அப்டேட் கிடைத்துள்ளது.

விலகிய விஜய் சேதுபதி
90களில் மினிமம் பட்ஜெட்டில் காமெடி திரைப்படங்களை இயக்கி மெஹா ஹிட் கொடுத்தவர் சுந்தர் சி. முறை மாமன், முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அஜித்தின் உன்னைத்தேடி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக ஹாரர் த்ரில்லர் ஜானரில் அரண்மனை படத்தின் மூன்று பாகங்களை இயக்கினார் சுந்தர் சி. தற்போது அரண்மனை 4ம் பாகத்தை இயக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருந்த நிலையில், தற்போது அவர் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஹீரோவான சுந்தர் சி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில், ஹீரோ, வில்லன் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, கோடிகளில் சம்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், கால்ஷீட் பிரச்சினையால் தான் அவர் விலகியதாக செய்திகள் வெளியாகின. இதனால், இந்தப் படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். அவருடன் காமெடியில் கலக்க சந்தானமும் இணைந்துள்ளார். இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் நாயகிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

மீண்டும் களமிறங்கும் தமன்னா?
அதன்படி, அரண்மனை 4ல் தமன்னா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, கோலிவுட் பக்கம் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருந்தார். இந்நிலையில், ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் தமன்னாவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தான் அரண்மனை 4 படத்திலும் தமன்னாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

இரண்டு நாயகிகளுடன் அரண்மனை 4
இந்நிலையில், தமன்னா மட்டும் போதாது என நினைத்த சுந்தர் சி, ராஷி கண்ணாவையும் அரண்மனை 4 படத்தில் நடிக்க வைக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே அரண்மனை 3ம் பாகத்தில் ஜோதி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது அரண்மனை 4ம் பாகத்திலும் ராஷி கண்ணா கமிட் ஆகியுள்ளாராம். தமன்னா, ராஷி கண்ணா இருவரும் நடிப்பது குறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி, ஷாகித் கபூருடன் ராஷி கண்ணா நடித்திருந்த ஃபார்ஷி வெப் சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











