Don't Miss!
- Automobiles
எவ்வளவு காசை கொட்டி கொடுத்தாலும் இந்த புதிய ஜாவா பைக்கை வாங்குறது கஷ்டம்!! காரணம் என்ன தெரியுமா?
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- News
ட்விஸ்ட்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஆதரவு கேட்ட எடப்பாடி.. நிராகரித்த ஏ.சி.சண்முகம்! என்ன சொன்னர்
- Finance
தீபிந்தர் கோயல் கொடுத்த செம அப்டேட்.. 800 பேருக்கு நல்ல சான்ஸ்.. நீங்க ரெடியா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
நடிகருடன் டேட்டிங் சென்ற தமன்னா..கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் லீக்!
சென்னை : நடிகை தமன்னா பிரபல நடிகருடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிய போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில லீக்காகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
இந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா அப்படியே தமிழ், தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். தமிழில் கேடி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த தமன்னா, குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
திருமணத்திற்கு ஓகே சொன்ன தமன்னா..மாப்பிள்ளை யார் தெரியுமா? பரபரப்பாக நடக்கும் கல்யாண வேலை!

நடிகை தமன்னா
நடிகர் கார்த்திக் நடித்த சிறுத்தை படத்தில் நடிகை தமன்னா தனது இடையழகை காட்டி அனைவரையும் கிறங்க வைத்தார். இடையழகி சிம்ரன் இடத்தை தமன்னா நைசாக தட்டித்தூக்கினார். இதுவே அவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ரவுண்டு வர காரணமாக அமைந்தது.

நல்ல கம்பேக்
கதைக்கு முக்கியத்துவம் பார்க்காமல், அழகு பொம்மை போல வந்து செல்லும் தமன்னா. பாகுபலி படத்தில் வாளை கையில் வைத்து கொண்டு மிரட்டி இருந்தார். அதே போல ஓடிடியில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ், அவருக்கு நல்ல கம்பேக் கொடுத்தது. தற்போது இவர் போலா சங்கர் என்ற தெலுங்கு படத்திலும், போலே சூடியன் என்ற இந்தி படத்திலும், பாந்த்ரா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகருடன் நெருக்கமாக இருந்த தமன்னா
இந்நிலையில், நடிகை தமன்னா பிரபல நடிகரான விஜய் வர்மாவுடன் புத்தாண்டு கொண்டாட கோவா சென்றுள்ளார். அப்போது அங்கு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட பார்ட்டியில் கலந்து கொண்ட இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேட்டிங் கிசுகிசு
நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவுடன் பல இடங்களில் டேட்டிங் செய்வதாகவும், இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டாலும் இதுகுறித்து இருவரும் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருக்கின்றனர். தமன்னாவின் பிறந்த நாள் அன்று வீட்டில் நடைபெற்ற பார்ட்டில் நடிகர் விஜய் வர்மா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.