ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழா.. ஜக்கி வாசுதேவ் உடன் நடிகை தமன்னா உற்சாக நடனம்!
சென்னை: ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிவனை மகா சிவராத்திரியை முன்னிட்டு நடிகை தமன்னா வழிபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா நாடு முழுவதும் பெரும் கோலாகலத்துடன் நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் மகா சிவராத்திரி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தியான மையம் மூலம் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட நிலையில், ஜெயிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை தமன்னா ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு சிவனை வழிபட்டுள்ளார்.

ஜனாதிபதி பங்கேற்பு
ஆண்டு தோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு கலந்து கொண்டார். மேலும், ஏகப்பட்ட சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள், இசை கலைஞர்கள் என பலரும் சிவராத்திரி விழாவில் பங்கேற்றுள்ளனர்.

ஏகப்பட்ட நடிகைகள்
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு காலையிலேயே ஏகப்பட்ட கோலிவுட் நடிகைகள் ஈஷா யோகா மையத்திற்கு படையெடுத்தனர். ஆதியோகி சிலை முன் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டனர். நடிகைகள் மிருணாளினி ரவி, மேகா ஆகாஷ் மற்றும் மம்தா மோகன் தாஸ் உள்ளிட்ட பல நடிகைகள் நேற்று நடைபெற்ற ஈஷா யோகா மைய மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர்.

தமன்னா வழிபாடு
சமீபத்தில், ஈஷா யோகா மையத்தில் உள்ள துர்கா சிலைக்கு பூஜை செய்த நடிகை தமன்னா நேற்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவிலும் கலந்து கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தீவிர சிவ பக்தையான தமன்னா மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி சிலைக்கு முன் விடிய விடிய கண் விழித்து பிரார்த்தனை செய்தார்.
ஜக்கி வாசுதேவ் உடன் டான்ஸ்
ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட ஜெயிலர் பட ஹீரோயின் நடிகை தமன்னா ஜக்கி வாசுதேவ் உடன் நடனமாடிய வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

ரஜினிகாந்த் வழிபாடு
நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் உள்ள சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டு தியானம் செய்த புகைப்படங்களும் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக வலம் வருகின்றன.

ஜெயிலர் படம் நல்லா ஓடணும்
ரஜினிகாந்த் மற்றும் தமன்னா நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படம் நல்லா ஓடணும் ஈஸ்வரா என தமன்னா வேண்டிக் கொண்டாரா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் போட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் உடன் முதல் முறையாக ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு தமன்னாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் வர்மாவுடன் காதல்
நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் விஷயம் புத்தாண்டு வீடியோவில் விஜய் வர்மாவுக்கு அவர் லிப் லாக் அடித்த வீடியோ காட்சி வெளியானது மூலம் அம்பலமானது. இந்நிலையில், சீக்கிரமே விஜய் வர்மாவுடன் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என தமன்னா வேண்டிக் கொண்டாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











