காவாலா பண்ண மேஜிக்.. மீண்டும் அந்த நடிகருக்கு ஜோடியாகிறாரா தமன்னா.. பரபரக்கும் கோலிவுட்!

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி நடிகர் அஜித்தை வைத்து இயக்கப் போகும் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியானது.

ஆனால், அதன் பின்னர் இன்னமும் அந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட் ஏதும் வெளியாகவில்லை. விஜய்யின் லியோ படத்தில் நடித்த நடிகை த்ரிஷா அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன.

Tamannaah Bhatia in talks for onboard for Ajith Kumars Vidamuyarchi after Kaavaala hit?

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்து வரும் ஐடென்டிடி படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஹீரோயின் தேடுதல் வேட்டையில் விடாமுயற்சி படக்குழு இருப்பதாக கூறுகின்றனர்.

விரைவில் விடாமுயற்சி: துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், இறுதி வரை விக்னேஷ் சிவன் எழுதிக் கொடுத்த எந்தவொரு கதையும் அஜித்துக்கு பிடிக்காத நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் அவரை தூக்கி விட்டு இயக்குநர் மகிழ் திருமேனிக்கு அந்த வாய்ப்பை அஜித் வழங்கினார்.

நடிகர் அஜித் ஒரு பக்கம் வெளிநாடுகளில் பைக் டூர் சென்று வரும் நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தின் திரைக்கதை பல மாதங்களாக உருவாக்கியும் மெருகேற்றியும் வந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் உறுதியாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து விடும் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tamannaah Bhatia in talks for onboard for Ajith Kumars Vidamuyarchi after Kaavaala hit?

மலையாளத்துக்கு சென்ற த்ரிஷா: லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் குந்தவையாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி உள்ள நடிகை த்ரிஷா அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் லியோ படம் வெளியாக உள்ள நிலையில், அஜித் படத்திலும் த்ரிஷா நடிக்கப் போவதாக பேச்சுவார்த்தைகள் அடிபட்டன. ஆனால், கால தாமதம் ஆவதை அறிந்து கொண்ட த்ரிஷா மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்து வரும் ஐடென்டிடி படத்தில் நடிக்க ஓகே சொல்லி அதிகாரப்பூர்வமாக ஆன்போர்டும் ஆகி விட்டார்.

காவாலா பண்ண மேஜிக்: சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் உலகம் முழுவதும் டிரெண்டாகி வரும் நிலையில், அஜித்துக்கு ஜோடியாக தமன்னாவை புக் செய்யலாம் என்கிற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே நடிகர் அஜித்துக்கு ஜோடியாக வீரம் படத்தில் தமன்னா நடித்திருந்த நிலையில், மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும், அடுத்த மாதம் விடாமுயற்சி படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாவது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X