காவாலாலாம் முக்கியமில்லை.. கன்டென்ட் தான் முக்கியம்.. இந்தியில் ஜெயிலர் ப்ரோமோஷனை ஆரம்பித்த தமன்னா!

மும்பை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், தற்போது இந்தியில் காவாலா பாடலை ரிலீஸ் செய்து பேசியுள்ளார் நடிகை தமன்னா.

வெள்ளை நிற டாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களை குளிர வைத்துள்ள தமன்னா ஒரு சினிமாவுக்கு முக்கியமே கன்டென்ட் தான் என பேசியுள்ளார்.

Tamannaah Bhatia introduces Kaavaala song hindi version to Bollywood fans today

Tu Dilbara என காவாலா பாடலின் இந்தி வெர்ஷனை அறிமுகப்படுத்தி பேசிய தமன்னா அந்த பாடலுக்கு ஸ்டேஜில் ஆட்டம் போட்ட வீடியோக்களும் டிரெண்டாகி வருகின்றன.

தாறுமாறு சந்தோஷத்தில் தமன்னா: இந்தியில் ஜீ கர்தா வெப்சீரிஸ், லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி என அடுத்தடுத்து வாய்ப்புகளும் புகழும் குவிந்து வந்த நிலையில், நடிகை தமன்னாவுக்கு தமிழிலும் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ரிலீஸ் என தாறுமாறு சந்தோஷத்தில் உள்ளார்.

Tamannaah Bhatia introduces Kaavaala song hindi version to Bollywood fans today

விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த தமன்னா தமிழில் முதன்முறையாக ரஜினிகாந்த் உடன் ஜோடிப் போட்டு ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு தமன்னா ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது லேடி கிரஷ்ஷா என்றே கேள்விகள் கிளம்பி உள்ளன.

இந்தியில் வெளியான காவாலா: தமிழில் காவாலா பாடல் வெளியான நிலையிலேயே குஜராத் நடிகை சோபியா அன்சாரி வரை ஆட்டம் போட்ட நிலையில், இன்று இந்தியில் Tu Dilbara என காவாலா பாடலின் இந்தி வெர்ஷனை வெளியிட்டுள்ளனர்.

Tamannaah Bhatia introduces Kaavaala song hindi version to Bollywood fans today

அந்த நிகழ்ச்சிக்காக க்யூட் லுக்கில் மேடை ஏறிய நடிகை தமன்னா காவாலா பாட்டுக்கு ரசிகர்களுடன் ஆட்டம் போட்டு அரங்கையே உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

கன்டென்ட் தான் முக்கியம்: ஒரு படம் ஹிட் ஆக பாடல்களும், ஹீரோயின், சக நடிகர்கள் என அனைவரும் இருந்தாலும், அந்த படத்தின் கன்டென்ட் தான் வெற்றிப்படைப்பாக மாற்ற முக்கியம்.

Tamannaah Bhatia introduces Kaavaala song hindi version to Bollywood fans today

காவாலா பாட்டுக்கு நான் நடனமாடியுள்ளேன். ஒரு ஹீரோவால் இந்த பாட்டுக்கு ஆட முடியாது. அது என் வேலை, அதை நான் சிறப்பாக செய்துள்ளேன். அதே போல இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். ஒவ்வொருத்தரும் அவர்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர். நிச்சயம் ஜெயிலர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக திரையில் வெளியாகும் என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X