Tamannaah: காவாலா, அச்சச்சோ எல்லாம் ஓரம்போங்க.. தமன்னாவோட அடுத்த தரமான சம்பவம் வந்துடுச்சு!

மும்பை: டாப் ஹீரோயின்கள் எல்லாம் தாறுமாறாக கவர்ச்சி டான்ஸ் ஆட ஆரம்பித்த பிறகு சன்னி லியோன், முமைத் கான், மும்தாஜ் போன்ற நடிகைகள் எல்லாம் வேண்டாம் என்கிற நிலையே வந்து விட்டது. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டதை தொடர்ந்து நடிகை தமன்னாவும் வரிசையாக கவர்ச்சி டான்ஸ் ஆடி இளைஞர்களுக்கு கிளாமர் ட்ரீட் கொடுத்து வருகிறார்.

15 வயதிலேயே சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்த தமன்னா 34 வயது வரை சுமார் 19 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த வயதிலும் 20 வயது இளம் நடிகையை போல தமன்னா நடனம் ஆடுவதை பார்த்து திரையுலகினரே ஷாக் ஆகியுள்ளனர்.

Tamannaah heroine

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசி வரை நெல்சன் தமன்னாவை கண்ணுலயே காட்டலையேப்பா என்கிற ரேஞ்சில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நிலையில், தற்போது அதை விட தாறுமாறான டான்ஸை ஸ்ட்ரீ 2 எனும் இந்தி படத்திற்காக தமன்னா போட்டுள்ளார்.

காவாலா டான்ஸ்: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா, சுனில் நடனமாடிய காவாலா பாடலில் கடைசியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்து செம ஸ்டெப் போட்டு ஸ்கோர் செய்திருப்பார். ஜெயிலர் படத்துக்கு பெரிய ஹைப்பே இல்லாமல் இருந்த நிலையில், அனிருத் இசையில் தமன்னா தாறுமாறாக நடனமாடிய காவாலா பாடல் தான் அந்த படத்திற்கு முதல் புரமோஷனாக அமைந்தது. அதன் பின்னர், ஹுகும் உள்ளிட்ட பாடல்கள் படத்திற்கான ஹைப்பை எகிறச் செய்தன.

அச்சச்சோ சாங்: சுந்தர். சி இயக்கி நடித்த அரண்மனை 4 படத்தில் தமன்னா சேலை கட்டிய குழந்தைகளுக்கு அம்மாவாகவும் இறந்து போன ஆவியாகவும் நடித்திருந்தார். ராஷி கன்னா கூட படத்தில் பெரிதாக கிளாமராக நடிக்காத நிலையில், அந்த 2 நடிகைகளையும் வைத்து படத்துக்கான புரமோஷன் பாடலாக அச்சச்சோ பாடலை உருவாக்கி கிளைமேக்ஸில் போட்டு படம் முடிந்தும் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு செய்து விட்டார் சுந்தர். சி. தமன்னாவின் டிரெஸ் மற்றும் டான்ஸ் என அந்த பாடலிலும் கலக்கு கலக்கி விட்டார்.

அடுத்த ஐட்டம்: அமர் கெளசிக் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ஸ்ட்ரீ 2 படத்தில் தமன்னா நடனமாடிய புதிய பாடல் வீடியோ இன்று வெளியாகி இணையத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. தமன்னாவின் ரசிகர்கள் ரிப்பீட் மோடில் அந்த பாடலை பார்த்து உற்சாகமடைந்து வருகின்றனர். ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஸ்ட்ரீ 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது.

பேய் ஹிட்: தமிழில் அரண்மனை 4 ஹிட் அடித்ததை போல பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான ஷைத்தான், முஞ்சியா உள்ளிட்ட பேய் படங்கள் செம ஹிட் அடித்த நிலையில், ஸ்ட்ரீ 2 திரைப்படமும் தமன்னாவின் பாடல் புரமோஷனுடன் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஜ் கி ராத் எனும் தொடங்கும் தமன்னாவின் அந்த பாடல் தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X