Tamannaah Bhatia: அத்துமீறி தமன்னா கையை பிடித்த ரசிகர்…என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Tamannaah Bhatia (தமன்னா) கடை திறப்பு விழாவிற்கு கலந்து கொள்ள வந்த நடிகை தமன்னாவிடம் ரசிகர் ஒருவர் கையை பிடித்து அத்துமீறி உள்ளார்.

இந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா அப்படியே தமிழ், தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம்10ந் தேதி வெளியாக உள்ளது.

Tamannaah Bhatia shake hands and pose for a selfie with fan

ஜெயிலர்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தில், தமன்னா நடிகையாகவே நடித்துள்ளார். இப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான 'காவாலா' பாடலை ஷில்பா ராவ் பாடியிருந்தார். இதில் தமன்னாவின் கிளாமர் ஆட்டம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது. படம் வெளியாவதற்கு முன்பே 100மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

வேதாளம் ரீமேக்: அதே போல அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போல ஷங்கர் படத்திலும் நடிகர் சிரஞ்சீவி ஜோடியாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் சுஷாந்த், முரளி சர்மா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்கு வரஉள்ளது. தமன்னா இரண்டு ஸ்டார் நடிகர்களுடன் நடித்த திரைப்படமும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் தமன்னா.

Tamannaah Bhatia shake hands and pose for a selfie with fan

அத்துமீறிய ரசிகர்: இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா, விழா அரங்கை விட்டு வெளியில் வந்த போது, திடீரென ரசிகர் பாதுகாப்பு போலீசாரை மீறி தமன்னா அருகில் ஓடி வந்து அவரது கையை பிடித்தார். உடனே உடனிருந்த போலீசார் அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். ஆனால், ரசிகரோ ஒரே ஒரு செல்ஃபி என கெஞ்சினார்.

தங்கம் சார் என் தலைவி: முதலில் ரசிகரைப் பார்த்து பயந்த தமன்னா, பின் ரசிகர் கெஞ்சியதால் மனம் இறங்கி பாதுகாவலர்களுக்கு அறிவுரை கூறி விலகச் செய்து, தன் ரசிகரின் ஆசைப்படி அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் தங்கம் சார் என் தலைவி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X