சுத்த சைவமாக மாறிய தமன்னா.. யாருக்காகத் தெரியுமா?

தன் நாய்க்குட்டிக்காக சைவமாகியுள்ளார் நடிகை தமன்னா.

By Jayachitra

சென்னை: தனது செல்ல நாய்க்குட்டிக்காக தனக்குப் பிரியமான அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார் நடிகை தமன்னா.

தமிழில் கேடி, கல்லூரி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை தமன்னா. இவர் அசைவ உணவுப் பிரியை. மீன் மற்றும் இறைச்சி வகை உணவுகள் தவறானது இவரது உணவில் இடம் பிடித்து வரும்.

வெளியில் சென்றாலும் அசைவ உணவுகள் தான் பெரும்பாலும் இவரது தேர்வாக இருக்கும். இந்நிலையில், தனது செல்ல நாய்க்குட்டிக்காக சைவ உணவிற்கு மாறியுள்ளார் தமன்னா.


பெப்பிள்:

பெப்பிள்:

நடிகைகள் பெரும்பாலும் நாய்க்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். செல்லப் பிராணிகள் எனக் கூறுவதைவிட சிலர் தங்களது நாய்க்குட்டிகளை குழந்தைகள் போலவே பாவித்து வளர்க்கின்றனர். அந்தவகையில் தமன்னாவும் பெப்பிள் என்ற நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார்.

பொழுதுபோக்கு:

பொழுதுபோக்கு:

படப்பிடிப்புகள் இல்லாத பொழுதுகளில் அந்த நாய்க்குட்டியோடு விளையாடுவது தான் தமன்னாவின் பொழுதுபோக்கு. பெப்பிளை தனது குடும்பத்தில் ஒருவராகவே கருதி வளர்த்து வருகிறார் அவர். பெப்பிள் மீது தமன்னாவிற்கு பாசம் அதிகம்.

அசைவ உணவு:

அசைவ உணவு:

இந்நிலையில், கடந்த மாதம் பெப்பிளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வேதனையடைந்த தமன்னா, பெப்பிள் விரைவில் குணமாகி வந்தால், தனக்கு மிகவும் பிடித்த ஒரு பழக்கத்தைக் கைவிட முடிவு செய்தார். அதன்படி, பெப்பிள் குணமானதும் தனக்குப் பிடித்தமான அசைவ உணவுகளை இனிச் சாப்பிடுவதில்லை என அவர் முடிவெடுத்துள்ளார்.

சைவம்:

சைவம்:


இதனால் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறி விட்டார் அவர். இது தனக்கு சவாலானது தான் என்றாலும், பெப்பிளுக்காக இந்தக் கடினமான முடிவை எடுத்ததாகக் கூறுகிறார் தமன்னா.

தேவி 2:

தேவி 2:

தமன்னா இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘சைரா நரசிம்மரெட்டி' படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார். தேவி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். மேலும் 2 தெலுங்கு படங்களும் அவர் கைவசம் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X