மகா சிவராத்திரி விழா.. ஒரு பக்கம் சந்தானம் கண் கலங்கினால்.. மறுபக்கம் தமன்னா என்ன பண்றாங்க பாருங்க!

சென்னை: ஆண்டுதோறும் ஈஷா யோகா மையம் மகா சிவராத்திரி விழாவை கோலாகலமாக நடத்தி வருகிறது. இந்தியாவின் பிற மாநில மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்து பலபேர் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர். நேற்று நடைபெற்ற விழாவில் தமன்னா, பூஜா ஹெக்டே, சந்தானம், சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதற்கு முன் நடைபெற்ற ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழாக்களில் நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா, அமலா பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், நடிகை தமன்னா மற்றும் பூஜா ஹெக்டே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு முழுக்க கண் விழித்து சிவனை வழிபட்டனர்.

Tamannaah gives prasadham at Isha Yoga Maha Shivaratri festival video trending now

மகா சிவராத்திரி: மகளிர் தினம் மற்றும் மகா சிவராத்திரி என இரு பெரும் பண்டிகைகள் நேற்று ஒரே நாளில் ஒரு சேர வந்தன. ஒரு பக்கம் நயன்தாரா தனது கணவருடன் மகளிர் தினத்தை கொண்டாட துபாய்க்கு சென்றிருந்தார். மறுபக்கம் பூஜா ஹெக்டே, தமன்னா, சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள் ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.

கண் கலங்கிய சந்தானம்: சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து அவர் நடித்த கிக் மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி சுமாரான வெற்றியை பெற்ற நிலையில், இங்க நான் தான் கிங்கு படத்தில் அடுத்து நடித்து வரும் சந்தானம் நேற்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு சிவனை வழிபட்ட நடிகர் சந்தானம் கண்கள் குளமாக கண் கலங்கியபடி மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

பிரசாதம் கொடுத்த தமன்னா: நடிகைகள் தமன்னா மற்றும் பூஜா ஹெக்டேவும் ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். நடிகை தமன்னா ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு தனது கையாலேயே சர்க்கரை பொங்கல் எல்லாம் பிரசாதமாக வழங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சாமியார் லுக்கில் தமன்னா: ஒடெலோ 2 படத்தில் நடித்து வரும் தமன்னா சாமியார் கெட்டப்பில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நேற்று வெளியிட்டு இருந்தார். ஒரு கையில் தடியும் மறு கையில் சிவனை போல உடுக்கையையும் அவர் வைத்திருந்த நிலையில் சிவ சக்தி எனும் கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X