Tamannaah - லஸ்ட் ஸ்டோரிஸ் 2.. அந்தக் காட்சிக்காக தமன்னா பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மும்பை: Tamannaah (தமன்னா) லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் தமன்னா பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் 2005ஆம் ஆண்டு சந்த் சா ரோஷன் செக்ரா படத்தின் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. அதனையடுத்து தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் இரண்டு படங்களும் அவருக்கு சரியான அடையாளத்தை பெற்றுக்கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் 2006ஆம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் தமன்னா. முதல் படத்திலேயே நெகட்டிவ் கேரக்டரில் நடித்ததால் ஓரளவு கவனம் பெற்றார்.

முன்னணி நடிகை: அதனையடுத்து தமிழில் வியாபாரி, கல்லூரி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் கல்லூரி படம் ஹிட்டாகி நல்ல நடிகை என்ற பெயரை தமன்னாவுக்கு பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், சுறா, பையா, சிறுத்தை, தில்லாலங்கடி, வீரம் ஆகிய படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.
குறைந்த வாய்ப்புகள்: ஆனால் திடீரென தமன்னாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. மீண்டும் பாலிவுட் சென்ற தமன்னா அங்கு தனது திறமை மற்றும் அழகு ஆகியவைகளை வைத்து பட வாய்ப்புகளை பெற்றார். அப்படி அவர் நடித்த ஹிம்மத்வாலா, எண்டெர்டெயின்மெண்ட், ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்கள் ஓரளவு கவனத்தை அவர் பக்கம் திருப்பியது.
ஜீ கர்தா: சூழல் இப்படி இருக்க ஜீ கர்தா என்ற வெப் சீரிஸில் நடித்தார். அதில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. ஹாலிவுட்டில் நடிப்பதற்காகத்தான் அவர் இவ்வாறு கவர்ச்சி காட்டுகிறார் என பலர் பேச அதை தமன்னா மறுத்து; கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன் என விளக்கம் அளித்தார். அதேபோல் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2விலும் கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.

தமன்னாவின் சம்பளம் எவ்வளவு: இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்ததற்காக தமன்னா பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு மூன்று முதல் நான்கு கோடி ரூபாய்வரை சம்பளம் பெற்ற தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் கவர்ச்சி அதிகம் இருந்ததன் காரணமாக ஆறு கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார் என கூறப்படுகிறது.
விஜய் வர்மாவுடன் காதல்; ஜெயிலரில் தமன்னா: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் தனக்கு ஜோடியாக நடித்த விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார் தமன்னா. அதனை சமீபத்தில்தான் அவர் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன்னா ஹிந்தி தவிர்த்து தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்திலும் நடித்துவருகிறார். அப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











