Tamannaah: ஜெயிலரில் ரஜினியை ஓரங்கட்டிய தமன்னா யூடியூப்பில் காவாலா சாங் செய்த சம்பவம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் அடுத்த வாரம் 10ம் தேதி வெளியாகிறது.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து காவாலா பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியானது.
அனிருத்தின் இசையில் தமன்னாவின் ஆட்டத்துடன் வெளியான காவாலா பாடல் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்தப் பாடல் மூலம் ஜெயிலரில் ரஜினியையே ஓரங்கட்டி தரமான சம்பவம் செய்துள்ளார் தமன்னா.
ரஜினியை ஓரங்கட்டிய தமன்னா: கோலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் தரமான செய்கையாக இந்தப் படம் இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என மூன்றே படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன், ஜெயிலரில் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கியுள்ளார். இந்தப் படம் ரஜினி, நெல்சன் இருவருக்கும் கம்பேக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், விநாயகன், வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து படத்தின் ட்ரெய்லரும் வெளியானது. ஜெயிலர் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால் படம் சூப்பர் ஹிட் ஆகும் என ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
ஆனாலும், ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியையே ஓரங்கட்டியுள்ளார் தமன்னா. இப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான 'காவாலா' பாடலை ஷில்பா ராவ் பாடியிருந்தார். இதில் தமன்னாவின் கிளாமர் ஆட்டம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது. சமீபத்தில் ஜீ கர்தா வெப் சீரிஸ், லஸ்ட் ஸ்டோரிஸ் 2ம் பாகம் என செம்ம ஹாட்டாக நடித்து ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்த தமன்னா, காவாலா பாடலிலும் அதே வைப் கொடுத்து திக்குமுக்காடச் செய்தார்.

அதேநேரம் இப்பாடலில் தமன்னாவுடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினியும் சின்னதாக என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனாலும், தமன்னாவின் ஆட்டத்துக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் காணாமல் போய்விட்டதாக அவரது ரசிகர்களே கூறி வந்தனர். இப்பாடலைத் தொடர்ந்து ஜெயிலரில் இருந்து வெளியான ரஜினியின் மாஸ் பாடல்கள் கூட காவாலாவிடம் கவிழ்ந்தேவிட்டன. ஒருகட்டத்தில் தமன்னாவுக்காக ஜெயிலர் பார்க்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்யத் தொடங்கினர்.
ஆகமொத்தம் ஜெயிலர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமாக இல்லாமல், தமன்னாவின் மூவியாக மாறிவிட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக காவாலா பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது. பாடல் வெளியாகி ஒரே மாதத்தில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. ஏனெனில் ஜெயிலர் ட்ரெய்லரே இதுவரை 14 மில்லியன் பார்வைகள் மட்டுமே ரீச் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காவாலா பாடல் 100 மில்லியன் வியூஸை தமன்னா ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











