Tamannaah - வைரமோதிர விவகாரம்.. அது எப்படி அப்படி இருக்க முடியும்?.. தமன்னா காதலர் விஜய் வர்மா கேள்வி?
சென்னை: Tamannaah (தமன்னா) தமன்னாவுக்கு உலகின் ஐந்தாவது பெரிய வைர மோதிரம் பரிசாக கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து அவரது காதலர் விஜய் வர்மா பேசியிருக்கிறார்.
தமன்னா தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னனி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து கோலிவுட்டை ஒரு காலத்தில் ரூல் செய்துகொண்டிருந்தார். தமிழைப் போல தெலுங்கிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை தமிழிலும் தெலுங்கிலும் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஹிந்தியில் தமன்னா: இதனையடுத்து ஹிந்தியில் கால் பதித்த அவர் ஹும்மத்வாலா, பிளான் ஏ பிளான் பி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.அங்கும் தனது நடிப்பு மற்றும் அழகை வைத்து வெற்றிக்கொடி நாட்டிய தமன்னாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.அதன்படி சமீபத்தில் அவரது நடிப்பில் ஜீ கர்தா வெப் சீரிஸும், லஸ்ட் ஸ்டோரிஸ் 2என்ற ஆந்தாலஜியும் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
ஓவர் கவர்ச்சி: ஹிந்தியில் அவர் நடிக்க ஆரம்பித்ததும் போதும் கவர்ச்சியை கொஞ்சம் அதிகமாகவே காட்டிவருகிறார். ஜீ கர்தாவையும், லஸ்ட் ஸ்டோரி 2வையும் பார்த்த ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள். மேலும் ஹாலிவுட் வாய்ப்புக்காகத்தான் தமன்னா ஓவர் கவர்ச்சியில் இறங்கியிருக்கிறார் என விமர்சனம் எழுந்தாலும் அதனை தமன்னா திட்டவட்டமாக மறுத்து; கதைக்கு தேவை என்பதால்தான் அப்படி நடிக்கிறேன் என விளக்கமும் அளித்திருந்தார்.

காதல்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க தொடங்கினார்.அதனை இரண்டு பேருமே சமீபத்தில்தான் உறுதி செய்திருந்தனர். அதுகுறித்து பேசிய தமன்னா உடன் நடிப்பவரை காதலிப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.விஜய் வர்மா எனக்காகவே படைக்கப்பட்டிருப்பது போல் இருக்கிறார் என் காதலுடன் பேசியிருந்தார். விரைவில் இரண்டு பேருக்கும் திருமணமும் நடக்கவிருக்கிறது.
ஐந்தாவது பெரிய வைரம்: இந்நிலையில் தமன்னாவுக்கு ராம்சரண் மனைவி உபாசனா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய வைரத்தை பரிசளித்ததாகவும், அதன் விலை சுமார் இரண்டு கோடி ரூபாய் எனவும் தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது.. அதனை மறுத்த தமன்னா அது வைரமே கிடையாது. வைர மாடலில் இருக்கும் பாட்டில் ஓப்பனர்தான். விளையாட்டாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்தேன் என விளக்கமளித்திருந்தார்.
விஜய் வர்மா பேட்டி: தற்போது அந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா, "அது மோதிரம் இல்லை பாட்டில் ஓப்பனர் என்பது அனைவருக்குமே தெரியும் என நம்புகிறேன். அதுமட்டுமில்லாமல் உலகின் ஐந்தாவது பெரிய வைரத்தின் விலை எப்படி இரண்டு கோடி ரூபாயாக இருக்க முடியும்" என குறிப்பிட்டார்.
மேலும் தமன்னா குறித்து பேசிய அவர், என்னிடம் எந்த நேரத்தில் எதை சொல்ல வேண்டும் என தமன்னாவுக்கு தெரியும். அறிவுரையும் வழங்குவார்; மோட்டிவேஷனும் கொடுப்பார். அவர் எனக்காக இருக்கிறார் என தெரிவித்தார். தமன்னா நடிப்பில் தமிழில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











