சூடான… மிருதுவான சமோசா…. தமன்னாவுக்கு பிடித்த சிற்றுண்டி !

சென்னை : நடிகை தமன்னா தனக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி சமோசா என்று தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு பிடித்த சமோசா குறித்து ரூட் மேப் போட்டு விளக்கி உள்ளார் தமன்னா.

வலைத்தளத்தில் வெளியான இந்த தகவலால் சமோசா பிரியர்கள், லைக் மழையை பொழிந்து வருகின்றனர்.

சிற்றுண்டி பிரியர்கள்

சிற்றுண்டி பிரியர்கள்

வகை வகையாக உணவு வகைகளை சமைத்து சாப்பிட்டாலும் சிற்றுண்டி மீது இருக்கும் ஆர்வம் எப்போதும் குறையவே குறையாது. அதுவும் விடுமுறை நாளில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு சுட சுட பஜ்ஜி, வடை, சமோசா சாப்பிடுவது என்பது ஒரு அலாதியான மகிழ்ச்சியைத் தரும்.

அலாதி பிரியம்

அலாதி பிரியம்

நடிகை தமன்னாவுக்கும் சமோசா என்றால் அலாதி பிரியமாம். அதுவும் சூடான மற்றும் மிருதுவான சமோசாக்களை கடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சி இருக்கே அப்பாடா என்று கூறியுள்ளார். சமோசாவுக்கு என்றே தனி ரூட் மேப் போட்டு விளக்கு உள்ளார் தமன்னா. மேலும் தனது இன்ஸ்டாவில், #samosalover #samosislife #diaryofafoodie #foodie #foodlover மற்றும் #foodislife போன்ற ஹேஷ்டேக்குகளையும் பயன்படுத்தி உள்ளார்.

வெப் சிரீஸ்

வெப் சிரீஸ்

நடிகை தமன்னா கோலிவுட்டில் கடைசியாக விஷாலுடன் 'ஆக்ஷன்' படத்தில் நடித்திருந்தார். மேலும், இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் வெப் தொடரான நவம்பர் ஸ்டோரியில் நடித்திருந்தார். இதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார் தமன்னா.

மாஸ்டர் செஃப்

மாஸ்டர் செஃப்

தற்போது இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறையாகும்.

More from Filmibeat

Read more about: tamannaah தமன்னா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X