Tamannaah - எனது காதலர் ஒரு பச்சோந்தி.. என்ன தமன்னா இப்படி சொல்லிட்டாங்க

சென்னை: Tamannaah (தமன்னா) நடிகை தமன்னா தனது காதலர் குறித்து விஜய் வர்மா குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா இப்போது பாலிவுட்டில் தனது திறமையால் வளர்ந்திருக்கிறார். பப்ளி பவுன்சர், ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் சமீபத்தில் ஜீ கர்தா வெப் சீரிஸில் நடித்திருந்தார். அமேசான் ப்ரைமில் ஜீ கர்தா வெப் சீரிஸ் வெளியானது. அந்த வெப் சீரிஸ் கதைக்காக பேசப்பட்டதோ தமன்னாவின் கவர்ச்சி, நெருக்கமான காட்சிகளுக்காக ரசிகர்களால் ரொம்பவே பேசப்பட்டது.

Tamannaah Open Talks about Actor Vijay Varma

லஸ்ட் ஸ்டோரிஸ் 2: இதனையடுத்து நெட்ஃப்ளிக்ஸில் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவிருக்கும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்திருக்கிறார் தமன்னா. ஆந்தாலஜியாக உருவாகும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் சுஜோய் கோஷ் இயக்கியிருக்கும் கதையில் விஜய் வர்மாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ட்ரெய்லரை பார்த்தபோது இதிலும் தமன்னா கவர்ச்சியாக நடித்திருப்பது உறுதியானது.

ஏன் இப்படி?: இதனையடுத்து தமன்னாவுக்கு ஹாலிவுட் ஆசை வந்துவிட்டது அதனால்தான் தொடர்ச்சியாக கவர்ச்சியாக நடிக்கிறார் என்று ஒரு தரப்பினர் கூறினர். ஆனால் அதை மறுத்த தமன்னா, 'நான் முத்தக் காட்சியில் நடிப்பதை முன்பெல்லாம் விரும்பியதில்லை. ஆனால் இப்படி நடிப்பதற்கு 18 வருடங்களை கடந்திருக்கிறேன். குறிப்பாக இந்தக் கதைக்கு முத்தக் காட்சி தேவைப்பட்டது. லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் எனது கதையை இயக்கிய சுஜோய் கோஷ் நல்ல இயக்குநர். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற காட்சிகளில் நான் நடிக்கவில்லை' என விளக்கமளித்திருந்தார்.

சமீபத்திய பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா, "வேறு எந்த நடிகருடனும் விஜய்யை தவிர நான் பாதுகாப்பாக உணரவில்லை. ஒரு நடிகை பாதுகாப்பாக உணர்வது மிகவும் முக்கியம். அவர் என்னை பாதுகாப்பாக உணர வைத்தார். அதனால் எந்த பயமும் இல்லை. அனைத்தையும் அவர் ஈஸியாக்கினார். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.ஒரு கதாபாத்திரத்தை அணுகும் முறையில் அவர் ஒரு பச்சோந்தி. கதாபாத்திரத்திற்கு ஏற்ப மாறிவிடுவார்.

ஏன் நடித்தேன்?: இயக்குநர் சுஜோய் கோஷிடமும், விஜய் வர்மாவிடமும் நிறைய கற்றுக்கொள்ள முடியும். லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் எதுவுமே இல்லையென்றாலும்கூட அவர்களிடம் ஏதாவது கற்றுக்கொள்வேன். அதனால்தான் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடிக்கவும் விரும்பினேன்" என்றார். இதற்கிடையே விஜய் வர்மாவுக்கும் தனக்கும் காதல் என மாதக்கணக்காக ஓடிக்கொண்டிருந்த தகவலை சில வாரங்களுக்கு முன்பு தமன்னா உறுதிப்படுத்தியிருந்தார்.

தமன்னா செய்த உறுதி: விஜய் வர்மாவுடனான காதல் குறித்து பேசியிருந்த தமன்னா, "என்னுடன் நடிக்கும் நடிகரை காதலிப்பேன் என நான் நினைக்கவில்லை. லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் விஜய் வர்மாவுடன் காதல் ஏற்பட்டது. நான் எதிர்பார்க்கும் நபர் போலவே இருந்தார்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமன்னா தமிழில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X