Tamannaah - அந்த விஷயம் அஜித்திடம் பிடிக்கல; அதை அவர்கிட்ட சொல்லவும் முடியல.. போட்டுடைத்த தமன்னா

சென்னை: Tamannaah (தமன்னா) அஜித்திடம் ஒரு விஷயத்தை ஓபனாக சொல்ல முடியவில்லை என தமன்னா தெரிவித்திருக்கிறார்.

கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னாவுக்கு வியாபாரி படம் கைகொடுக்கவில்லை. அதனையடுத்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் அவர் நடித்த கல்லூரி படம் ஹிட்டடித்து தமன்னாவை நல்ல நடிகையாக அடையாளப்படுத்தியது. இதனையடுத்து தமிழில் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அமைந்த படங்கள் ஹிட்டடிக்கவும் செய்தன.

Tamannaah Open Talks about Ajiths Salt and Pepper hair style

தமன்னா காலம்: விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இதன் காரணமாக கோலிவுட்டில் தமன்னா அலை அடிக்க ஆரம்பித்தது. தமிழை போலவே தெலுங்கிலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தமன்னாவின் கொடி உயர பறந்தது. இதற்கிடையே நடிகர் கார்த்தியுடன் சேர்த்து அவர் கிசுகிசுக்கவும் பட்டார்.

குறைந்த வாய்ப்பு: யார் கண் பட்டதோ தெரியவில்லை தமிழிலும், தெலுங்கிலும் வாய்ப்புகள் குறைந்தன. அதேசமயம் ஹிந்தியில் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி அவர் நடிப்பில் சமீபத்தில் ஜீ கர்தா வெப் சீரிஸ் வெளியானது. அதேபோல் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலஜியிலும் நடித்தார். அதில் நடித்தபோதுதான் விஜய் வர்மாவை அவர் காதலிக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

சென்சேஷனல் தமன்னா: ஹிந்தியில் செட்டில் ஆகியிருந்த தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்துக்காக மீண்டும் அழைத்து வந்தார். படத்தில் சிறிய வேடத்தில் அவர் நடித்திருந்ததாக கூறப்பட்டாலும் முதல் சிங்கிளான காவாலாவில் தமன்னாவின் நடனம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து அவர் கோலிவுட்டில் மீண்டும் ஹாட் டாபிக்காக இருக்கிறார். படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.

Tamannaah Open Talks about Ajiths Salt and Pepper hair style

தமன்னா பேட்டி: இந்நிலையில் தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அப்போது நெறியாளர், வீரம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பீர்கள். ஆனால் அஜித் அந்தப் படத்தில் கொஞ்சம் டை அடித்திருக்கலாம் என எங்களுக்கு தோன்றியிருக்கிறது. உங்களுக்கும் அப்படி தோன்றியிருக்கிறதா? இதுகுறித்து இயக்குநரிடம் சொல்ல வேண்டும் என நினைத்தீர்களா? அஜித் அதில் டை அடித்திருந்தால் இன்னும் உங்கள் இருவருக்கும் மேட்ச் ஆகியிருக்குமோ என்றும் தோன்றியது என கேள்வியை முன்வைத்தார்.

தமன்னா பதில்: அதற்கு பதிலளித்த தமன்னா, "அப்போது என்னால் கேட்கமுடியவில்லை. இப்போது என்றால் கேட்டிருப்பேன் ஆரம்பத்தில் அப்படியான சுதந்திரம் எதுவும் எனக்கு இல்லை. ஆனாலும் ஒவ்வொரு நடிகரும் கேள்வி கேட்க வேண்டும். மற்ற துறைகளில் அந்த சுதந்திரம் இருக்கிறது. வெளிப்படையாக பேச சில இயக்குநர்கள் ஸ்பேஸ் கொடுக்கிறார்கள். சிலர் கொடுப்பதில்லை" என்றார். இதற்கிடையே அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X