Tamannaah - விஜய் படத்தில் நடித்ததுதான் தமன்னா செய்த பெரிய தப்பாம்.. சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் இதுவேறயா?
சென்னை: Tamannaah (தமன்னா) சுறா படத்தில் நடித்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என்று தமன்னா ஓபனாக பேசியிருக்கிறார்.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய். இவரது படங்கள் அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிப்பதாக தொடர்ந்து கூறப்பட்டுவருகின்றது. மேலும் படத்தின் வியாபாரமும் பல கோடி ரூபாய்க்கு நடப்பதாகவும் பேச்சு உண்டு. தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் லியோ படம்கூட இதுவரை 400 கோடி ரூபாய் பிஸ்னெஸ் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம்பர் 1 விஜய்யா?: இதன் காரணமாக விஜய்தான் இப்போது கோலிவுட்டின் நம்பர் 1 என்ற பேச்சு பலமாக எழுந்திருக்கிறது. தற்போது இந்த பஞ்சாயத்து சூடுபிடித்திருந்தாலும் இதை பற்ற வைத்தது என்னவோ தயாரிப்பாளர் தில்ராஜுதான். வாரிசு பட சமயத்தில் அவர் விஜய்தான் நம்பர் 1 என கூறினார். ஆனால் வாரிசு படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் லியோ படத்துக்கு 130 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கும் விஜய்; அடுத்த படத்துக்கு 175 கோடி ரூபாய் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினியின் பேச்சு: சூழல் இப்படி இருக்க ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சு சூப்பர் ஸ்டார் விவகாரத்தை சூடுபிடிக்க வைத்திருக்கிறது. எனவே லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி மூலம் ரஜினிக்கு விஜய் பதிலடி கொடுப்பார் என தளபதி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தமன்னாவின் ஒரு பேட்டி ட்ரெண்டாகியுள்ளது.
செய்த பெரிய தப்பு: விஜய்யுடன் நடித்த சுறா படம் பற்றி பேசிய தமன்னா, "சுறா படத்தில் நடித்ததுதான் நான் செய்த பெரிய தவறு. அந்தப் படம் கண்டிப்பா ஃப்ளாப் ஆகும் என்று எனது உள் உணர்வு அப்போதே சொன்னது. ஆனால் வேறு வழியில்லாமல் நடித்துக்கொடுத்தேன். ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டால் அதை முடித்துக்கொடுக்க வேண்டியது நடிகர்களின் கடமை என்பதை நான் அறிவேன்.
இனி டார்ச்சர் செய்யமாட்டேன்: ஒரு படத்தில் சில விஷயங்கள் சரியாக இல்லை என்றால் நான் தைரியமாக இப்போது சொல்வேன். ஆனால் சுறா சமயத்தில் எதையும் சொல்லமுடியவில்லை. அதனால் நடித்துக்கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். பல படங்களை பார்க்கிறோம்; பல படங்களில் நடிக்கிறோம்; அதனால் சில விஷயங்களை பார்த்தாலே தெரியும்.இந்தப் படம் சரியாக வராது என்று.

நடிகர்களுக்குமே அந்த உள் உணர்வு இருக்கும். இனிமேல் அதுபோன்ற படங்களில் நடித்து உங்களை எல்லாம் டார்ச்சர் செய்யமாட்டேன்" என்றார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமன்னாவோ ஓபனாகவே சொல்லிவிட்டாரே என ரஜினி ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
சுறா: எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் சுறா. விஜய், வடிவேலு, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விஜய்யின் 50ஆவது படமாக உருவான அந்தப் படம் விஜய்யுடைய கரியரிலேயே மோசமான தோல்வி மற்றும் ட்ரோல்களை சந்தித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











