ஸ்ரீதேவி நடனம்... தமன்னா உடன் நீயா நானா போட்டி போடும் பூஜா ஹெக்டே - ஜெயிப்பது யார்
ஸ்ரீதேவியின் நடனம் தமன்னா உடன் போட்டி போடும் பூஜா ஹெக்டே
சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பும் நடனமும் நளினமும் தனித்துவமானது. அவரவருக்கென்று ஒரு தனித் திறமை உண்டு. உடல் அசைவுகளோடு முக பாவனைகளும் தனித்துவமாக இருக்கும். தமன்னா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே தனித் திறமை கொண்டவர்கள். இவர்கள் இருவருமே நடிகை ஸ்ரீதேவியின் பழைய பாடலை ரீமிக்ஸ் செய்து நடனமாடியுள்ளனர். தமன்னாவின் நடனத்தை ரசிகர்கள் பார்த்துள்ள நிலையில் பூஜா ஹெக்டே நடன அசைவில் தமன்னாவை முந்தி விடுவாரா என்று பார்க்க ஆவலாக உள்ளனர். ஸ்ரீதேவியைப் போல யார் ஹாட்டாக நடனமாடி வெற்றி பெற்றனர் என்று இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும்.
திரையுலகின் கனவு கன்னியான நடிகை ஸ்ரீதேவியின் நடை, உடை, பாவனை, நடிப்பு, நடனம் என அவரது அனைத்து செயல்களையும் பின்பற்ற பல நடிகைகள் எவ்வளவோ முயற்சி செய்தும் எவராலும் வெற்றி பெற முடியவில்லை. பாலிவுட், கோலிவுட்,டோலிவுட் என பல திரைப்படங்களும் பாடல்களும் இன்றைக்கும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

மண்பானை, மெட்டல் பானைகளின் பின்னணியில் எடுக்கப்பட்ட இரண்டு பாடல்களுமே நடிகை ஸ்ரீதேவிக்கு சூப்பர் ஹிட்டான பாடல்கள்.
ஒன்று தெலுங்கு பட பாடலான வென்னெலோச்சி கோதாராம்மா மற்றொன்று நைனான் மெய்ன் சப்னா எனும் ஹிந்தி பட பாடல். இந்த இரண்டு பாடலிலும் ஸ்ரீதேவியின் கவர்ச்சி நடனம், நளினங்கள், முகபாவம் அதற்கு ஏற்றார் போல் இசையமைப்பு இவை அனைத்தும் அந்த பாடல்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்.
தமன்னா

அந்த வகையில் தமன்னா அஜய் தேவ்கனோடு இணைந்து ஹிம்மத்வாலா எனும் இந்தி திரைப்படத்தில் நைனான் மெய்ன் சப்னா என்ற ரீமிக்ஸ் பாடலில் அற்புதமாக ஸ்ரீதேவியை போலவே நடனமாடி பட்டையை கிளப்பியிருப்பார்.
பூஜா ஹெக்டே

தமன்னாவை தொடர்ந்து வால்மீகி என்ற தெலுங்கு திரைப்படத்தில் வென்னெலோச்சி கோதாராம்மா என்ற ரீமிக்ஸ் பாடலுக்கு நடிகை ஸ்ரீதேவியைப் போலவே இடுப்பழகை காட்டி கவர்ச்சி நடனமாடியுள்ள பூஜா ஹெக்டே. இந்த படம் தமிழில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் ரீமேக், இதில்தான் ஸ்ரீதேவியை போல நடனமாடியுள்ளார் பூஜா ஹெக்டே.
வால்மீகி
வால்மீகி படத்தின் பாடலும் நடனமும் யுடுயூப்பில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. சினிமாவில் பார்க்கும் ரசிகர்கள் யாருக்கு அதிக மார்க் போடுவார்கள் என்று விரைவில் தெரிந்து விடும். ஸ்ரீதேவியைப் போல நடனமாடி அவரது நடன அசைவுகளை வெளிக்கொண்டு வந்ததில் வெற்றி பெற்றது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











