தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் தமன்னா... குஷியில் ரசிகர்கள்!

சென்னை : ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த செல்வராகவன் தனுஷ் கூட்டணி இப்பொழுது மீண்டும் இணைந்துள்ளது.

Recommended Video

Tamannaah Bhatia boredom Video | Exercise, Cooking, Trend Setting • MPL Gaming App

இருவரும் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் நானே வருவேன் என தொடர்ந்து பணியாற்றி அதில் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

வித்தியாசமான இரண்டு போஸ்டருடன் வெளியாகியிருந்த நானே வருவேன் படத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து இப்பொழுது பிரபல நடிகை ஒருவர் தனுஷுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

தி கிரே மேன்

தி கிரே மேன்

தனுஷின் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் பாலிவுட் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நிலையில் தமிழில் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் தனுஷ் அதேசமயம் பாலிவுட்டிலும் சில திரைப்படங்களில் நடித்து அங்கும் தன்னை சிறந்த நடிகராக நிரூபித்து வருகிறார். தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபக்கீர் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் கால் பதித்த தனுஷ் இப்பொழுது அவெஞ்சர்ஸ் தி எண்டு கேம் படக்குழுவுடன் இணைந்து தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்க இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு தனுஷிற்கு உலகம் முழுவதும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வந்தன.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து தனுஷ் நடித்துவரும் ஜகமே தந்திரம் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்க இத்திரைப்படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்க பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.

கைகூடியுள்ளது

கைகூடியுள்ளது

புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன என செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் தொடர்ந்து வெளியான மாஸ்டர்பீஸ் திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில், மீண்டும் இவர்கள் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வர இப்பொழுது அது கைகூடியுள்ளது.

தமன்னா ஒப்பந்தமாகியுள்ளதாக

தமன்னா ஒப்பந்தமாகியுள்ளதாக

ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 மற்றும் நானே வருவேன் என இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து இந்த கூட்டணி பணியாற்றி வருகிறது. இதில் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் திரைப்படம் என்பதால் ஒரு கதாநாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தனுஷ் மற்றும் தமன்னா ஏற்கனவே படிக்காதவன் மற்றும் வேங்கை போன்ற திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ள நிலையில் மூன்றாம் முறையாக நானே வருவேன் படத்தில் இணைய உள்ளதால் இந்த ஜோடியை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X