Tamannaah: என்னம்மா தமன்னா இப்படி பண்றீங்களேம்மா... Jee Karda ட்ரெய்லரால் அப்செட்டான ஜெயிலர் டீம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தமன்னா நடித்துள்ள ஜீ கர்தா வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில், தமன்னா டாப்லெஸ் காட்சிகளில் நடித்துள்ளதால் ஜெயிலர் படக்குழு அப்செட்டாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

 Tamannaah: Rajinis Jailer Team Upset for Tamannaah Jee Karda web series trailer

தமன்னாவால் அப்செட்டான ஜெயிலர் டீம்: கேடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான தமன்னா, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த தமன்னா, தற்போது பாலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறார். அதேநேரம் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தமன்னா நடித்துள்ள ஜீ கர்தா வெப் சீரிஸின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்தியில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

 Tamannaah: Rajinis Jailer Team Upset for Tamannaah Jee Karda web series trailer

இதுவரை ஹோம்லியான கேரக்டரில் மட்டும் நடித்து வந்த தமன்னா, ஜீ கர்தா வெப் சீரிஸில் ரசிகர்களையே மிரள வைத்துள்ளார். டாப்லெஸ், படுக்கையறை காட்சி என உச்சபட்ச கவர்ச்சியில் நடித்து பார்ப்பவர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார். முக்கியமாக இந்த காட்சிகளில் தமன்னாவின் ரியாக்‌ஷன் ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது. இன்னொரு பக்கம் லஸ்ட் ஸ்டோரிஸ் 2ம் பாகத்திலும் தமன்னா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் 2ம் பாகமும் அடல்ட் கண்டெண்டாக உருவாகியுள்ளது. ஏற்கனவே பாகுபலி படத்தில் பிரபாஸுடன் மேலாடை இல்லாமல் முதுகை மட்டும் காட்டி நடித்திருந்தார் தமன்னா. தற்போது அதையெல்லாம் கடந்து வேற லெவலில் களமிறங்கியுள்ளார். இதனால், ஜெயிலர் படக்குழு தான் அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Tamannaah: Rajinis Jailer Team Upset for Tamannaah Jee Karda web series trailer

தமிழ் ரசிகர்களிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப் பெரிய இமேஜ் உள்ளது. மேலும் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரஜினி, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலரில் தமன்னாவும் நடித்துள்ளார். இந்நிலையில், ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 இரண்டிலும் தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளது ஜெயிலர் படக்குழுவினருக்கு தர்மசங்கடமாகிவிட்டது.

ஜெயிலர் படம் வெளியாகும் போது ஜீ கர்தா வெப் சீரிஸ், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படங்களை குறிப்பிட்டு தமன்னாவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 தினங்களாக ஜீ கர்தா சீரிஸின் ட்ரெய்லரில் உள்ள தமன்னாவின் ரியாக்‌ஷன்களை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X