இந்தி பட ரீமேக்.. அதிக சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்த நயன்தாராவுக்கு பதில் நடிக்கிறார் தமன்னா!
ஐதராபாத்: இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க, நயன்தாரா அதிக சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்ததால் தமன்னா நடிக்கிறார்.
இந்தியில், அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், அந்தாதுன்.
பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

நடிகர் பிரஷாந்த்
சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கி இருக்கிறார். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். அந்தாதுன் கதை பியானோ மாஸ்டரை பற்றியது. பிரஷாந்த், பியானோ பயின்றிருக்கிறார் என்பதால் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்துவார் என்று தியாகராஜன் கூறியிருந்தார்.

தெலுங்கு ரீமேக்
இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதில் நிதின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் தபுவின் கேரக்டர் முக்கியமானது.

நடிகை நயன்தாரா
அதனால் அந்த கேரக்டரில் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க படக்குழு பேசி வந்தது. இதற்கிடையே, நடிகை நயன்தாராவிடம் பேசினர். அது நெகட்டிவ் கேரக்டர் என்ப்தால், அவர் அதிக கோடிகளை சம்பளமாக கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் வேறு நடிகைகளிடம் பேசி வந்தனர்.
Recommended Video

நடிகை தமன்னா
ரம்யா கிருஷ்ணன், நதியா உள்பட சில நடிகைகளிடம் பேசி வந்த நிலையில் தமன்னா இப்போது அந்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ராதிகா ஆப்தே நடித்த கேரக்டரில் நபா நடேஷ் நடிக்கிறார். படத்தை சுதாகர் ரெட்டி, நிகிதா ரெட்டி தயாரிக்கின்றனர். நவம்பர் மாதம் ஷுட்டிங் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











