மீசை வச்சு மாணிக்கமாக மாறி தமன்னா விளம்பரம் பண்ணாங்களே.. அந்த நவம்பர் ஸ்டோரி ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமான நவம்பர் ஸ்டோரியின் ஸ்ட்ரீமிங் தேதி வெளியாகி உள்ளது.

Recommended Video

Tamannaah Bhatia boredom Video | Exercise, Cooking, Trend Setting • MPL Gaming App

காஜல் அகர்வாலின் லைவ் டெலிகாஸ்ட் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி ஹிட்டான நிலையில், அடுத்ததாக நடிகை தமன்னாவின் வெப்சீரிஸை டிஸ்னி ஹாட்ஸ்டார் வெளியிடுகிறது.

மீசை வைத்துக் கொண்டு மாணிக்கம் சார் என்னுடையை நவம்பர் ஸ்டோரியை பாருங்க என சமீபத்தில் தமன்னா விளம்பரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காஜலை தொடர்ந்து தமன்னா

காஜலை தொடர்ந்து தமன்னா

பாலிவுட்டில் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, பூமி பெட்னேகர், அதா ஷர்மா என ஏகப்பட்ட பிரபல நடிகைகள் வெப்சீரிஸில் கலக்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில் ஒடிடி தள தயாரிப்புகளில் நடிகை ஸ்ருதி ஹாசன், காஜல் அகர்வால் என ஏகப்பட்ட நடிகைகள் களமிறங்கி வருகின்றனர். இந்நிலையில், அடுத்ததாக நடிகை தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

கிரைம் ஸ்டோரி

கிரைம் ஸ்டோரி

இயக்குநர் இந்திரா சுப்ரமணியன் இயக்கத்தில் தமன்னா, பசுபதி, ஜி.எம். குமார், விவேக் பிரசன்னா, அருள் தாஸ் மற்றும் நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் கிரைம் ஸ்டோரியாக உருவாகி உள்ளது. கொலை குற்றம் ஒன்றில் சிக்கி உள்ள பிரபல கிரைம் நாவல் எழுத்தாளரான தனது அப்பாவை காப்பாற்றும் பெண்ணாக தமன்னா இந்த வெப் தொடரில் நடித்துள்ளார்.

மிரட்டல் டிரைலர்

செத்த பிறகு 47 முறை பேனாவால் குத்தியிருப்பதாகவும், பெயின்ட்டை ஊற்றி தடயங்களை அழித்து இருப்பதாகவும் மிகவும் மிரட்டலான கதைக் களத்துடன் கிரைம் நாவலை படிக்கும் அனுபவத்தை அள்ளி தருகிறது தற்போது வெளியாகி உள்ள நவம்பர் ஸ்டோரி டிரைலர்.

மீசை வைத்து விளம்பரம்

மீசை வைத்து விளம்பரம்

கடந்த மாதமே நடிகை தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸ் தொடர்பான விளம்பரம் ஒன்று வெளியாகி வைரலானது. மீசை வைத்துக் கொண்டு மாணிக்கம் என்கிற பெயரில் நடிகை தமன்னா தனது நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸை பார்க்கும்படி கெஞ்சும் விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் எப்போ தான் ரிலீசாகும் பார்க்கலாம் என காத்திருந்தனர்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

மீண்டும் திரையரங்குகள் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒடிடி தளங்களின் ஆதிக்கம் பழையபடி அதிகரிக்கத் தொடங்கி விட்டன. வரும் மே 20ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப்சீரிஸின் அனைத்து எபிசோடுகளும் ஒரே அடியாக வெளியாகும் என்கிற அறிவிப்பை நடிகை தமன்னா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X