நடிகை தமன்னாவின் அப்பா, அம்மாவுக்கு பரவியது கொரோனா.. சோகத்தில் நடிகை.. ரசிகர்கள் ஆறுதல்!
சென்னை: தனது அப்பா, அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை தமன்னா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
மேலும், தனக்கும் தனது வீட்டில் உள்ள மற்றவர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
தமன்னாவின் பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

கூண்டோடு கொரோனா
கொரோனா ஒரு பக்கம் அதிகளவில் பரவி வந்தாலும், பாதுகாப்பான நெறிமுறைகளை பின்பற்றி நடிகர்கள் ஷூட்டிங்குகளை தொடங்க ஆரம்பித்து விட்டனர். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை படப்பிடிப்புகளுக்கு செல்லும் நடிகர்களுக்கு, கூண்டோடு கொரோனா பரவி வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அமிதாப் பச்சன் குடும்பத்துக்கே
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா என அமிதாப் பச்சனின் ஒட்டுமொத்த குடும்பத்துக்கே சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது குணமாகி மீண்டுள்ளனர்.

கடுமையான போராட்டம்
லேசான கொரோனா தொற்றுத் தான் தனக்கு உள்ளதாகவும், விரைவில் குணமடைந்து வருவேன் என நம்பிக்கை தெரிவித்து இருந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை, கொரோனா கடுமையாக வாட்டி வருகிறது. எதையும் தாங்கும் இரும்பு நெஞ்சு கொண்ட அந்த மனிதர் கொரோனாவுடன் கடுமையான போராட்டத்தை செய்து வருகிறார். விரைவில் பூரண குணம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமன்னா பெற்றோருக்கு கொரோனா
தொடர்ந்து பிரபலங்களையும் விட்டு வைக்காமல் துரத்தி வரும் இந்த கொரோனா தொற்று, தற்போது நடிகை தமன்னாவின் அப்பா மற்றும் அம்மாவையும் விட்டு வைக்கவில்லை. பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து, தற்போது நடிகை தமன்னா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமன்னாவின் நிலை
நடிகை தமன்னாவுக்கும் அவரது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும், பணியாளர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால், தான் உட்பட மற்ற யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என நடிகை தமன்னா தனது ரசிகர்களுக்கு விளக்கி உள்ளார். மேலும், தனது பெற்றோர்களுக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.

கைவசம்
கடந்த ஆண்டு தமன்னா நடிப்பில் தமிழில் ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ் என இரு படங்கள் வெளியாகின. தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி படம் வெளியானது. இந்த ஆண்டு வெளியான மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கெவரு படத்தில் ஒரு ஐட்டம் நம்பருக்கு தமன்னாவாகவே வந்து நடனமாடி சென்று இருந்தார். மேலும், நடிகை தமன்னா கைவசம் போலே சுடியான் எனும் இந்தி படமும் சீட்டிமார் எனும் தெலுங்கு படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உருவான தட் இஸ் மகாலக்ஷ்மி படம் ஒடிடியிலாவது வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











